(இராஜதுரை ஹஷான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும்.
இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
எதுல் கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புராதன பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
இந்தியாவின் இந்துத்துவவாத கொள்கைக்கு ஈர்க்கப்பட்டவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த மரபுரிமைகள் அழிப்பு பணிகளை துரிதமாக முன்னெடுத்து செல்கிறார்கள்.
வவுனியா வெடுக்குநாறி மலையில் பௌத்த மரபுரிமைகளுக்கு முரணான வகையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் சுதேச தமிழர்கள் பௌத்த மதத்துக்கு எதிராக செயற்படவில்லை. தமிழ் அடிப்படைவாதிகளே இந்தியாவின் இந்துத்துவவாத கொள்கைக்கு அடிபணிந்து இவ்வாறு முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட வகையில் பௌத்த மரபுரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு தரப்பினரை திருப்பதிப்படுத்துவதற்காக பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
பௌத்த மத உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை மக்கள் அனைவருக்கும் உண்டு. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மத மரபுரிமைகளுக்கு எதிரான முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுக்க மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து உரையாடவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM