(ஏ.என்.ஐ)
இந்திய - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்தியாவின் வர்த்தகச் செயலர் சுனில் பார்த்வால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருதரப்பு வர்த்தகம் என்பது மெய்நிகர் உச்சிமாநாட்டின்போது கையெழுத்திடப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் சேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையிலான ஒரு முழுமையான, ஆழமான ஒப்பந்தமாகும்.
இது குறித்து இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பினரும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான எளிய வணிக முறையை மேம்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து இணைந்து செயற்படுவதாகவும் இந்திய வர்த்தக செயலர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தொழில்துறையின் பிரதிநிதிகள், அந்தந்த துறைகளில் காணப்படும் வளர்ச்சியை குறிப்பிட்டனர்.
அதன்படி, 2022-23 நிதியாண்டில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு வர்த்தகம் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதிகளிலும் (எண்ணெய் அல்லாத) குறிப்பிடத்தக்க தாக்கத்தினை செலுத்தியுள்ளது.
இந்த வர்த்தகம் 72.9 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து (ஏப்ரல் 21 - மார்ச் 2022) 84.5 பில்லியன் டொலர் (ஏப்ரல் 22 - மார்ச் 2023) வரை உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 16 சதவிகித அதிகரிப்பை பதிவு செய்துள்ளது என கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM