இந்திய, பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுக்கான கூட்டுப் பயிற்சி  

Published By: Nanthini

04 May, 2023 | 02:48 PM
image

(ஏ.என்.ஐ)

ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடத்தப்படுகின்ற 'அஜெய வாரியர் 2023' எனும் இந்திய - பிரிட்டிஷ் இராணுவ பயிற்சி, இம்முறை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடைபெற்று வருகிறது. 

இதன்போது இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஆகிய இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கான பல்வேறு தந்திரோபாய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 

இந்த பயிற்சியின் நோக்கம் நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் விசேட சூழல்களில் நிறுவன அளவிலான துணை மரபுசார் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது ஒன்றாக செயற்படும் திறனை ஊக்குவித்தல் என்பனவாகும்.

இவ்விரு படைகளுக்கிடையேயான செயலாற்றல், நட்புறவு மற்றும் நட்பு ஆகியவற்றை வளர்ப்பதோடு, படையணிகளின் மட்டத்தில் கட்டளையிடுகை பயிற்சி மற்றும் களப் பயிற்சி ஆகியனவும் இப்பயிற்சியின் நோக்கங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இதன்போது பங்கேற்பாளர்கள் பல்வேறு உருவகப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் தங்கள் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் பல்வேறு பயிற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். 

பயிற்சி பெறுபவர்கள் தங்களின் தந்திரோபாய பயிற்சிகளை காட்சிப்படுத்துவது, செம்மைப்படுத்துவது மற்றும் ஒருவருக்கொருவர் செயற்பாட்டு அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வது என்பன  'அஜெய வாரியர்' பயிற்சியின் முக்கிய அம்சங்களாகும். 

இந்திய இராணுவம், பிரிட்டிஷ் இராணுவம் ஆகிய இரு தரப்புக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த பயிற்சி அமைகிறது. 

இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் என இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47