பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து ஆர்ஜென்டீன வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரஸ்ரீழிவித்துள்ளன.
கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆகஸ்ட்டிலிருந்து விளையாடி வருகிறார்.
7 தடவைகள் பெலோன் டி' ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
சவூதி அரேபியாவில் மெஸி குடும்பத்தினர் (AFP photo)
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற, லோறியட்ன் கழகத்துடனான போட்டியில் மெஸி பங்குபற்றினார். இப்போட்டியில் 3:1 விகித்தில் பிஎஸ்ஜி கழகம் தோல்வியுற்றது. இத்தோல்வியின் பின்னர், பிஎஸ்ஜி கழகத்தின் வீரர்களுக்கு கடந்த திங்கட்கிழமை பயிற்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இப்பயிற்சியில் பங்குபற்றாமல், தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவுக்கு மெஸி சென்றார். சவூதி சுற்றுலாத்துறையுடனான தனது ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அங்கு மெஸி சென்றிருந்தார்.
இந்நிலையில், தனது அனுமதியின்றி, பயிற்சியை தவிர்த்துவிட்டு சவூதி அரேபியாவுக்கு சென்றதால் மெஸியை தண்டிப்பதற்கு பிஎஸ்ஜி நிர்வாகம் தீர்மானித்தது.
இதனால், 2 வாரங்களுக்கு அக்கழகத்திலிருந்து மெஸி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பல்வேறு பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்: Photo AFP
லயனல் மெஸிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை அமுல்படுத்தப்படும் காலத்தில் அவர் பயிற்சியில் பங்குபற்றவோ, விளையாடவோ முடியாது. அக்காலத்தில் அவருக்கு சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என பிஎஸ்ஜி வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லயனல் மெஸி இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிராக பிஎஸ்ஜி கழகத்தின் தலைமையகத்துக்கு முன்னால் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. (சேது)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM