சவுதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 7 சவுதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி, குவைத், சீனா மற்றும் சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த 229 பேரும் புதன்கிழமை மாலை ஜெத்தா நகரை வந்தடைந்தனர். அவர்கள் மன்னரின் கப்பல்களான “மக்கா” மற்றும் “ஜுபைல்” மூலம் அழைத்து வரப்பட்டனர்.

அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 103 நாடுகளைச் சேர்ந்த 5,865 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களில் 246 சவூதி பிரஜைகளும் 5,619 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM