கடக ராசி அன்பர்களுக்கு அட்டமத்து சனி பாதிப்பை ஏற்படுத்துமா?

Published By: Nanthini

03 May, 2023 | 09:23 PM
image

ழரை சனியில் ஏழரை வருடங்கள் படும் துன்பத்தை அட்டம சனியில் இரண்டே வருடங்களில் பட்டுவிட்டேன், வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்பார்கள் சிலர். 

ஏழரை சனிக்காலம் போலவே அட்டம சனியின் தாக்கத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையே இதன் மூலம் நாம் தெரிந்துகொள்கின்றோம். ஆனால், சிலரோ "என்ன... எனக்கு அட்டம சனி நடக்கிறதா, சொல்லவே இல்ல..." என்ற பாணியில் பேசுவர். 

ஏன் இவ்வாறு ஒவ்வொரு நபருக்கும் இடையே மாறுபாடான விளைவுகள் இடம்பெறுகின்றன?

இப்பொழுது அட்டம சனி நடக்கிற கடக ராசி அன்பர்கள் அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சனிப் பெயர்ச்சி என்பது ராசிக்கானது, இலக்னத்துக்கானது அல்ல என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அந்த வகையில், தற்போது கடக ராசிக்கு 8ஆம் இடத்தில் (கும்பம்) கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி முதல் சனி சஞ்சரிக்க ஆரம்பித்துள்ளான். 

இந்நிலையில், கடக ராசியினருக்கு அட்டம சனி இடம்பெற ஆரம்பித்துள்ளது. இது 2025 மார்ச் வரையில் தொடரும். பொதுவாக 8ஆம் இடத்தில் ஒரு கிரகம் வலுப்பெறும்போது பேராசையை தூண்டிவிட்டு, அதன் மூலம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலைமைகள் உருவாகின்றன என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

அந்த வகையில், கடக ராசிக்கு 8இல் உள்ள சனி, தொழில் ஸ்தானம், குடும்ப வாக்கு தனஸ்தானம், சுகஸ்தானம் ஆகியவற்றை பார்க்கிறார். எனவே, தொழில் விடயத்தில் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். 

புதிய தொழில் ஆரம்பித்தல், புதிய முதலீடுகளை மேற்கொள்ளுதல், புதிதாக கூட்டு சேர்ந்து தொழில் செய்தல் என்பவற்றில் கடும் நிதானம் தேவை, இருக்கின்ற தொழில் இடத்திலும் பொறுமையுடன் செயற்பட வேண்டும். அதேபோல குடும்ப உறுப்பினர்களுடன் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடுதல், எவருக்கும் வாக்கு கொடுத்தல், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொடுக்கல் / வாங்கலில் ஈடுபடுதல் என்பவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது. 

மாணவர்கள் எதிர்ப்பாலினரிடத்தில் கவனமாக பழகுவதுடன் கல்வியில் தீவிர அக்கறை செலுத்துவது நல்லது. அதேபோல நீண்ட தூர பயணங்கள், சுற்றுலா செல்வது, இரவில் பயணிப்பது என்பவற்றை முடிந்தவரையில் தவிர்க்கலாம். கட்டாய தேவை இருப்பின் அவதானமாக இருக்க வேண்டும்.

சரி, அட்டம சனி யாருக்கெல்லாம் பெரிய பாதிப்பை தராது என்றால் தற்பொழுது 1,5,9 ஆம் அதிபதிகளது அல்லது ஜாதகப்படி யோகமாக அமர்ந்த கிரகத்தின் திசை நடப்பவர்கள், வளர்பிறையில் பிறந்து சந்திரன் சுபத்துவம் பெற்று இருப்பவர்கள், போன்றோருக்கு இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். திசா புத்திகள் காரணமாகவே ஒரே ராசியில் பிறந்தவர்களுக்கு ஒரே கோச்சார நகர்வுகள் இருந்தும் வெவ்வேறு விதமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இதைத் தவிர்த்து சூரியன், சந்திரன் மற்றும் கேது, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்களின்  திசை நடப்பவர்கள், (அந்த கிரகம் யோக கிரகமாக அமையாத பட்சத்தில்) உடல் நலத்திலும் ஏனைய விடயங்களிலும் மிகுந்த கவனமுடன் செயற்பட வேண்டும்.

இந்த காலப்பகுதியில் ஏழைகளுக்கு உணவளிப்பது, சனி பகவானின் காரகத்துவங்களில் ஒன்றான எளிமையை பேணுவது, வியர்வை வெளியேறும் வகையில் உழைப்பது, இஷ்ட தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது போன்றவை பெரும் நலன்களை அளிக்கும்.

- எஸ். ரொஷாந்தினி  

(ஜோதிட மூல நூல்கள், ஜோதிடர்கள் மூலம் பெற்ற தகவல் அடிப்படையிலான தொகுப்பு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க...

2023-05-31 12:49:27
news-image

கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2023-05-30 11:57:42
news-image

12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம்...

2023-05-27 11:40:57
news-image

நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

2023-05-26 12:46:01
news-image

சாபங்களுக்கு பரிகாரங்கள் இருக்கிறதா..?

2023-05-24 15:01:26
news-image

உங்களது பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மயிலிறகு!

2023-05-23 13:33:51
news-image

கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான...

2023-05-22 13:10:39
news-image

குரு பகவான் பயோடேட்டா

2023-05-20 14:01:08
news-image

கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் +...

2023-05-16 15:33:52
news-image

கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

2023-05-16 11:06:51
news-image

எந்தெந்த ராசியினருடன் சேர்ந்தால் அதிர்ஷ்டம் கிட்டும்?

2023-05-15 16:56:34
news-image

தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

2023-05-15 11:47:23