கம்பளை நகரில் இருந்து பேராதெனிய வரையிலான புகையிரத பஸ் சேவையென்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் போக்குவரத்து அமைச்சர்  நிமல்  சிறிபாலடி சில்வா பிரதம அதிதியாக  கலந்நு கொண்டு குறித்த பஸ் சேவையை ஆரம்பித்து வைத்தார். 

இதில் மத்திய மாகாண முதலமைச்சர்  சரத் ஏக்கநாயக்க  மற்றும் பிரதியமைச்சர்  அநுராத ஜயரட்ண  ஆகியோர் கலந்து கொண்டனர்.  

சுனநெரிசல்  மிக்க பிரதேசங்களில் பயணிகளின்  நலன் கருதி குறித்த புகையிரத பஸ் சேவையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து  மற்றும் சிவில்  விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசணைக்கு  அமைய இந்த சேவை முன்னெடுக்கப்படுகிறது.