எம்மில் பலரும் பல்வேறு காரணங்களால் இரும தொடங்குகின்றனர். சிலருக்கு இருமல் இடைவிடாது ஏற்படும். இத்தகைய தருணங்களில் இருமலுடன் சளி மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறும். இதனை மருத்துவர்கள் ஹீமோப்டிசிஸ் எனும் நுரையீரல் தொற்று பாதிப்பு என தெரிவிக்கிறார்கள். சிலருக்கு இது தற்காலிகமாகவும், நாட்பட்ட பாதிப்பாகவும் வெளிப்படும்.
நுரையீரல் எம்முடைய சுவாச உறுப்புகளில் பிரதானமானது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஒட்சிசனை இந்த நுரையீரல் உட்கிரகித்து, அதனை உடலுக்கு அனுப்புகிறது. மேலும் காற்றில் இருந்து உட்பிரகித்த மற்றும் உடலிலிருந்து வெளியேற்றப்படும் அசுத்த காற்றை வெளியேறவும் உதவுகிறது. இந்த நுரையீரல், பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகளால் பாதிக்கப்படும்போது இதன் செயல்திறனில் தடுமாற்றம் உண்டாகிறது. நுரையீரலில் இயங்குதிறன் குறையும் போது, அதன் அறிகுறியாக குறட்டை, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. இதன் பாதிப்பு கடுமையாகும் போது இருமலுடன் ரத்தமும் வெளியேறுகிறது. இது ஒரு அவசர நிலை. அதாவது நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது என பொருள் கொள்ள வேண்டும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, சிகிச்சை பெற வேண்டும். இடைவிடாத தொடர் இருமல், இருமும் போது வெளியேறும் சளியில் இரத்தம், நெஞ்சு வலி, காய்ச்சல், மூச்சு திணறல்.. இவை இத்தகைய பாதிப்பின் தீவிர அறிகுறியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சிலர் இருமும் போது இரத்தம்.. இயல்பான அளவை விட கூடுதலாக வெளியேறினால் அது அவசர நிலை என கருதி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
மூச்சு குழாய் அழற்சி, காச நோய், நுரையீரல் புற்றுநோய், இதய பாதிப்பு, நோய் தொற்றுகள், ஒட்டோ இம்யூன் டிசிஸ் எனப்படும் எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே எமக்கு எதிராக செயல்படும் நிலை ...போன்ற பலவற்றின் காரணமாக இத்தகைய பாதிப்பு உண்டாகிறது.
இதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியுடன் முதன்மையான நிவாரண சிகிச்சையை அளிப்பர். பாதிக்கப்பட்டிருக்கும் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிந்துரைகளை தீவிரமாகவும், உறுதியாகவும் கடைபிடிக்க வேண்டும்.
டொக்டர் தீபா செல்வி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM