2022 இல் ஊடகவியலாளர்கள் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது - ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம்

Published By: Rajeeban

03 May, 2023 | 03:13 PM
image

உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஊடகங்கள் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து நாடுகளும் உண்மையை இலக்குவைப்பதையும் அதனை செய்தியாக தெரிவிப்பவர்களையும் இலக்குவைப்பதை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022இல் ஊடகவியலாளர் படுகொலை 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்பது நம்பமுடியாத விடயம் என தெரிவித்துள்ள  அன்டோனியோ குட்டரஸ் பத்திரிகை சுதந்திரம் என்பதே ஜனநாயகம் நீதியின் அடிப்படை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல் 67 ஊடகபணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

உண்மைக்கும் புனைகதைக்கும், அறிவியலுக்கும் சதிக்கும் இடையே உள்ள கோடுகளை மங்கலாக்க முயலும் தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு ஆகியவற்றால் உண்மை அச்சுறுத்தப்படுகிறதுஎனவும் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டிஜிட்டல் தளங்களும் சமூக ஊடகங்களும் தீவிரவாதிகள் தவறான கருத்துக்களை முன்வைப்பதையும் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதையும் இலகுவாக்கியுள்ளன.எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடக தொழில்துறையின் வீழ்ச்சி காரணமாக உள்ளுர் ஊடகங்கள் மூடப்பட்ட நிலையும் ஊடகங்கள் சிலரின் கரங்களில் குவிந்துள்ள நிலையும் கருத்துச்சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின்...

2024-09-17 20:29:48
news-image

டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை...

2024-09-17 15:58:36
news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20