மேஷம்
வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவின் அனுகிரகம் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும். லாபஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதும், உங்களின் தொழில் சார்ந்த காரியங்களில் முன்னேற்றம் அமையும். ராசியில் சூரியன் உச்சம் பெறும் காலமென்பதால்.. அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி. மரியாதை கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்காலத்தின் நோக்கங்களையும், திட்டங்களையும் செயல்படுத்த துவங்குவீர்கள். உங்களின் ராசிநாதன் செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் அமர்வது வெற்றியை பெற்று தரும்.
சந்திராஷ்டம நாட்கள்:
06.05.2023 சனிகிழமை மாலை 03.59 முதல் 08.05.2023 திங்கள் இரவு 08.27 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
செம்மஞ்சள், நீலம், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிகிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் மாரியம்மனுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வணங்கி வர, விரைவில் அனைத்து காரியமும் நிறைவேறும்.
ரிஷபம்
மதியால் விதியை வெல்லாம் என்று சொல்லும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் யோகாதிபதி சனி பத்தில் அமர்வதும். ராசிநாதன் ராசியிலும், விரையாதிபதி தனஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் உறுதியுடன் செயல்பட்டு உங்களின் காரியங்களை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். நேர்மையும், உண்மையும் உங்களின் திறவுகோலாக இருக்கும். நல்லபடியாக எதையும் சாதித்து காட்டும் திறமையை பெற்று விளங்குவீர்கள். கலைதுறையினருக்கு எதிர்பார்த்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வாய்ப்பு அமையும். நிலம் சம்மந்தமான சில பிரச்சனைகளில் நல்ல முடிவுக்கு வரும். அரசியலில் திடீர் மாற்றம் உண்டாகும். உங்களின் செல்வாக்கு உயரும். பொருளாதாரம் மேன்மை தரும்.
சந்திராஷ்டம நாட்கள்:
08.05.2023 திங்கள் இரவு 08.28 முதல் 10.05.2023 புதன் இரவு 11.27 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, செம்மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வர சகல காரியமும் வெற்றியை தரும்.
மிதுனம்
புதிய திட்டங்களுக்குரிய நல்வழியை தெரிவு செய்யும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு, ராசி அதிபதியுடன் குருவும், சூரியனும் லாபஸ்தானத்தில் இனணந்திருப்பது பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை பெற்றுத் தரும். உங்களின் சரியான முயற்சிகளுக்கு விரைவில் நல்ல பலனைக் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பான வளர்ச்சியையும், வளமையும் பெறுவீர்கள். அறிவியல் பூர்வமான காரியங்களில் புதிய சாதனைகளை ஏற்படுத்துவீர்கள். முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நல்ல பலனை பெற்று தரும். சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறை சார்ந்த பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். உறவுகளிலிருந்து வந்த விரிசல் மறையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
10.05.2023 புதன் இரவு 11.28 முதல் 12.05.2023 வெள்ளி இரவு 01.48 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
திங்கள் கிழமை காலை ராகு காலத்தில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், மாவு உருண்டையும் வைத்து வேண்டிக் கொள்ள, காரிய தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
கடகம்
தர்மத்தை நிலை நாட்டுவதன் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் குரு அமர்வதும், சனி அட்டமஸ்தானத்தில் அமர்வதும், சில நேரம் கஷ்டங்களையும், சில நேரம் யோகத்தையும் தருவார்கள். பொதுவான வளர்ச்சிக்கு பாடுபடும் உங்களின் நல்ல நோக்கம் தடையின்றி இருக்கும். பொது நலமின்றி சுயநலம் கொண்டால் பல்வேறு வித தடைகளும், நெருக்கடிகளும் வந்து சேரும். இனி உண்மையை பேசியும், பிறரை வாழவைப்பது கொள்கையாக கொண்டால் எத்துன்பமுமின்றி வளம் பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லை நீங்கி நினைத்ததை எளிதில் அடைவீர்கள். கலைதுறையினரும், அரசியல் வாதிகளும் நல்ல வளர்ச்சிக்கு வழி கிடைக்கப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
12.05.2023 வெள்ளிகிழமை இரவு 01.49 முதல் 15.05.2023 திங்கள் அதிகாலை 04.23 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர சகல நலனும் உண்டாகும்.
சிம்மம்
வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்யும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும், பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் உச்சம் பெற்று முயற்சி ஸ்தானத்தில் பார்வையிடுவதும் உங்களுக்கு பக்க பலமாக அமையும். எதையும் தானாக நடக்கும் என்று இல்லாமல், உங்களின் முயற்சி மூலம் செயல்படுத்தும் போது அதற்கு தகுந்த நற்பலன்களை அடைவீர்கள். சிலருக்கு புதிய பதவிகளும், லட்சியத்தை அடையும் வாய்ப்பும் அமையும். குறைபட்டும், முடங்கியும் இருந்த பலரின் செயல்கள்... இனி சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். இதுவரை பட்ட சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். உங்களின் ஒவ்வொரு அசைவும் சில மாற்றத்தை தெளிபடுத்தி காட்டும். உரிய காலத்தில் உங்களின் வாழ்க்கை சூழ்நிலை மாறும்.
சந்திராஷ்டம நாட்கள்:
15.05.2023 திங்கள் அதிகாலை 04.24 முதல் 17.05.2023 புதன் காலை 08.13 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டி கொள்ள எளிதில் எல்லாம் சிறப்பாக நடக்கும்.
கன்னி
திறமையும், வளமையும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் அமர்ந்த சனி. யோக சனியாக அமைவதும்.. உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களை காத்து கொள்ளவும், கடனிலிருந்து விடுபடும் வாய்ப்பையும் பெறுவீர்கள். இதுவரை சுமையாக இருந்த அனைத்து காரியமும் எளிமையாக அமையப் பெறும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் அமையும். இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு, இனி தனஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்ப்பதும். உங்களின் பாதகாதிபதி குரு எட்டில் மறைவதும், குருவால் வரும் துன்பம் மறையும். எட்டாமிடத்தில் அமர்ந்து பனிரெண்டை பார்ப்பது உங்களுக்கு அதிக விரையமாகாமல் தடுக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
17.05.2023 புதன் காலை 08.14 முதல் 19.05.2023 வெள்ளி பகல் 02.00 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெள்ளை, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை, ஞாயிறுகளில் ராகு காலத்தில் நவகிரக வழிபாடுகளை தொடர்ந்து செய்வதன் மூலம், உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்து கொண்டு முன்னேறுவீர்.
துலாம்
காலத்திற்கு ஏற்றப்படி செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், யோகாதிபதி சனியின் பார்வை லாபஸ்தானத்திலும், தனஸ்தானத்திலும் இருப்பதும்.. உங்களின் தொழில் சார்ந்த அனைத்து பணிகளும் சிறப்பாக இயங்கும். உங்களின் உறுதியான நம்பிக்கை, அனைத்து காரியங்களுக்கும் பக்கபலமாகயிருந்து சிறப்பாக செயல்படும். வாகன வசதிகளை பெறுவீர்கள். கலைதுறையில் உங்களின் வளர்ச்சி முன்னேற்றம் காணும். ஆடம்பரமான வாழ்க்கையை கைவிட்டு, எளிமையான வாழ்க்கை சூழ்நிலைகளை வளர்த்து கொள்வீர்கள். புத்துணர்வும், புது பொலிவும் கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள். பெண்களின் பல நாட்கள் பிரச்சினை தானாக நல்ல முடிவுக்கு வந்து விடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் சிலருக்கு உண்டு. நீங்கள் எதையும் புரிந்து செய்வதால் மேலும் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
19.05.2023 வெள்ளிகிழமை பகல் 02.01 முதல் 21.05.2023 ஞாயிறு இரவு 10.12 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமை சுப்ரமணிய சுவாமிக்கு சிவப்பு நிற பூ வைத்து துவரைப் பருப்பு சாதம் நைவேத்தியம் வைத்து தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் ஜெயமாகும்.
விருச்சிகம்
பொது விடயங்களில் துணிச்சலுடன் செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு களத்திரஸ்தானாதிபதி சுக்கிரன் பார்வை பெறுவதும், தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் அமர்வதும் நல்ல பலனை பெற்றுத் தரும். தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு வந்து சேரும். நீண்ட நாட்கள் கவனம் செலுத்தி வந்த சில காரியம் விரைவில் நடந்து முடியும். புதிய வழக்குகள் வந்தாலும் அதனை எளிதில் சந்திப்பீர்கள். தொழிற்சங்கத்தில் சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். காலத்தையும், நேரத்தையும் வீணாக்காமல் தொடர்ந்து முன் முயற்சிகளை செய்து வருவீர்கள். உங்களின் ராசிக்கு அர்த்தாஷ்ட சனி காலம் என்பதால், உடல் நலனில் கவனம் செலுத்தி, மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று பலன் பெறுவது நல்லது. தொழிலில் முழு கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
21.05.2023 ஞாயிறு இரவு 10.13 முதல் 24.05.2023 புதன் காலை 08.41 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
செம்மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், திங்கள், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மை உண்டாகும்.
தனுசு
தைரியமும், துணிச்சலும் கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெறுவதும், உங்களின் மூன்றாமிடத்தில் சனி அமர்ந்து விரையஸ்தானத்தை பார்ப்பதும் உங்களுக்கு தொழிலிலும், உங்களின் முயற்சிக்கு நல்லபடி வெற்றியைப் பெற்று தரும். எதையும் சொல்லி விட்டு செய்யாமல் உடனே செய்து முடிக்கும் தைரியம் படைத்த உங்களின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் நீங்கள் எதிர்பார்த்த பதவிகளும், ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். குறுகிய கால வளர்ச்சியை அடைவீர்கள். முக்கியமான காரியங்களில் ஈடுபடும் போது உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைதுறையினருக்கு வாய்ப்புக்கள் தேடி வரும். பொருளாதார வளம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
24.05.2023 புதன் காலை 08.42 முதல் 26.05.2023 வெள்ளி இரவு 08.23 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், செம்மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
பிரதோச காலத்திலும், திங்கள் கிழமையிலும் சிவ வழிபாடு செய்வதும், விளக்கு ஏற்றி நந்திக்கு வழிபாடு செய்வதும் நற்பலன்களை பெற்றுத் தரும்.
மகரம்
திடமான நம்பிக்கையும், வலிமையும் கொண்ட மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி தனஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமைவதும். குரு மறைவு ஸ்தானங்களை பார்ப்பதும் நல்ல பலன்களை பெற்று தரும். நிலையான தொழில் அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல தொழில் அமையப் பெறுவீர்கள். குடும்பத்தில், இருந்து வந்த சச்சரவு முடிவுக்கு வரும். அரசியலில் புதிய மாற்றம் உண்டாகும். இதுவரை ஒதுங்கியிருந்த உங்களின் செயல்பாடுகள், மீ்ணடும் வளம் பெறத் துவங்கும். காரிய தடைகளிலிருந்து மீண்டு, உங்கள் செயல்பாடு மேன்மை அடையும். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைவர். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வீர். புதிய முயற்சிகளின் மூலம் வளர்ச்சியைப் பெற்று நலம் பெறுவீர்கள். பெண்களுக்கு சிறந்த முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நலம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
26.05.2023 வெள்ளி இரவு 08.24 முதல் 29.05.2023 திங்கள் காலை 07.37 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், வெள்ளிகிழமை அம்மன் வழிபாடும் செய்து, விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்ள, சகல காரியமும் வெற்றியை தரும்.
கும்பம்
எதையாவது சாதிக்கவேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக ராசிநாதன் அமர்ந்து உடல் பலம், மன பலத்தை தந்து எதை செய்தாலும் அதில் வலிமையுடன் செயல்படும் படி அருள்புரிவார். காரணமில்லாமல் எந்த காரியமும் இயங்காது. நினைத்ததை நினைத்தபடி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து, அவரது பார்வை படுமிடமான ஏழாமிடம், ஒன்பதாமிடம், லாபஸ்தானத்தில் அமைவது உங்களுக்கு ஊக்கத்தையும், நற்பலன்களையும் பெற்று தரும். உறுதியுடன் செயல்பட்டு ஏற்றம் பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த இனம் தெரியாத கவலையும், சங்கடமும் மறையும். தொழிலில் முன்பைவிட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உலக நாடுகளின் மூலம் உங்களுக்கு நற்செய்தியும், தொழில் வாய்ப்பும் அமையும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
01.05.2023 திங்கள் இரவு 12.14 முதல் 04.05.2023 வியாழன் காலை 09.20 மணி வரையும், 29.05.2023 திங்கள் காலை 07.38 முதல் 31.05.2023 புதன் மாலை 04.58 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், செம்மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் எல்லாம் சிறப்பாக நடக்கும்.
மீனம்
எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குரு அமர்ந்து உங்களின் அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நற்பலன் பெற்று தருவார். விரைய சனி காலம் என்பதால், வரும் வருமானத்தை சுபமான விரயமாக அமைத்து கொள்வது நல்லது. காலி மனை, காணி, வீடு கட்டுதல், திருமணம் செய்தல் போன்ற சுபசெலவுகளை உருவாக்கி கொள்வது நல்லது. உங்களின் அனைத்து தேவைகளையும், நல்ல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் உங்களுக்கு கூட்டு மூலம் நல்ல நண்பர்கள் அமைத்து அதன்மூலம் வளம் பெறுவீர்கள். அரசியலிலும் சிலருக்கு அறிமுகம் கிடைத்து நன்மை உண்டாகும். கலைதுறையினரின் இசை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பாராட்டு பெறுவீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு, உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். பொது நலன் கருதி நீங்கள் செயல்படும். ஒவ்வொரு நிகழ்வும் உங்களுக்கு சாதகமாக அமையும் நல்லதை உடனே செய்யுங்கள். பலனையும் உடனே அடையுங்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
04.05.2023 வியாழன்கிழமை 09.21 முதல் 06.05.2023 சனி மாலை 03.58 மணி வரை. 31.05.2023 புதன் மாலை 04.59 முதல் 02.06.2023 வெள்ளி இரவு 11.53 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, செம்மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளின் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வெள்ளை நிற பூ வைத்து வணங்கி உங்களின் வேண்டுதலை சொல்லி வர, எல்லாம் சிறப்பாக அமையும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM