கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்தில் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான்.

கடந்த வெள்ளிக்கிழமை 13-01-2016 அன்று மாலை தனது வீட்டின் சுவாமி அறையில் தூக்கில் தொங்கியே  இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த  நாகலிங்கம் கஜேந்திரன் வயது 16 எனும் சிறுவனே தற்கொலை செய்துள்ளான். 

குறித்த சிறுவன் க.பொ.சாதாரண தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த  மரணம் தொடர்பில் அயலவர்களும் உறவினர்களும் கருத்த தெரிவிக்கையில்,

அண்மையில்  குறித்த சிறுவனின் நண்பன் ஒருவன்  அதே கிராமத்தில் தற்கொலை செய்து கொண்டமையினையடுத்து விரக்தியடைந்த நிலையில் தனிமையில் இருந்து யோசித்து வந்ததாகவும், மரணமடைந்த நண்பன் தொடர்பில் பெரும் கவலையுற்றிருந்தாகவும்  தெரிவித்தனர்.

குறித்த  சிறுவனின் தற்கொலை தொடர்பில் மரண விசாரணைiயை  மரண விசாரணை  அதிகாரி யுடிஏ பிரியந்தவும், திடீர் மரண விசாரணையை மருத்துவர் க.திருலோகமூர்த்தியும்  மேற்கொண்டனர்.