கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் மழைவேண்டி   விவசாயிகளால்  குடை பிடித்து விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நிலவிவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.  இந்த நிலையில் மழைவேண்டி  கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட  பூசை வழிபாடுகளை மேற்கொண்டது.

இன்று ஞாயிறு காலை இரணைமடு குளத்திலிருந்து குடை பிடித்தவாறு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்து அங்கு வழிபாடுகளிள் ஈடுப்பட்டனர்.