ஜென்ம நட்சத்திரம் சூட்சுமமாக வலியுறுத்தும் கெடு பலன்கள் என்ன..?

Published By: Ponmalar

02 May, 2023 | 05:03 PM
image

எம்மில் பலரும் வெற்றி பெறுவதற்கான சூத்திரத்தை கற்றுக் கொடுத்தால்.. அதனை அப்படியே பதிலீடு செய்து வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்தால்.., எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற மாட்டார்கள். ஏனெனில் வெற்றிக்கான சூத்திரத்தை அவர்கள் நடைமுறைப்படுத்தும் பாணியில் சிறிய அளவிலான வித்தியாசத்தை புகுத்தியிருப்பர்.

இதனால் வெற்றி பெறும் சூத்திரத்தை சொல்லும் போதே அதனை எந்த முறையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதனையும், எந்த முறையை முற்றாக பயன்படுத்தக் கூடாது என்ற எதிர் நிலை அணுகுமுறையையும் விளக்கமாக சொல்ல வேண்டும்.

அதாவது உங்களது ஜாதகப்படி நீங்கள் எந்தெந்த நட்சத்திரத்தை... எதன் அடிப்படையில் புரிந்து கொண்டால், அவை உங்களுக்கு சாதகமான பலனை தரும் என்று விளக்கினாலும்.. எந்தெந்த நட்சத்திரங்கள் எம் மாதிரியான கொடுபலனை அளிக்கும் என்பதனையும் விவரித்து, இதனால்... இந்தந்த நட்சத்திரங்களுடன்... எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.

இந்த வகையில் உங்களது ஜென்ம நட்சத்திர அடிப்படையில் எந்தெந்த நட்சத்திரங்கள் உங்களுக்கு கெடுப்பலனை வழங்கும் என்பதனை தெரிந்து கொண்டால்.., நீங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெற முடியும்.

இது தொடர்பாக சோதிட நிபுணர்கள் விளக்கமளிக்கையில், 'சோதிட ரீதியாக எமக்கு நன்மையை அளிக்கும் நட்சத்திரங்கள் இருப்பதைப் போல்.., அவை தசா புத்தியில் வலிமையாக செயல்படுவதைப் போல்.. எமக்கு கெடுபலன்களை வழங்கும் நட்சத்திரங்களும் உண்டு.

ஜென்ம நட்சத்திரம் அதாவது நீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்களோ... நீங்கள் சுமந்து வந்திருக்கும் கர்மாவை கழிப்பதற்காக அந்த நட்சத்திரத்தில் உதித்திருக்கிறீர்கள். இதன் காரணமாகத்தான் ஜென்ம நட்சத்திரம் வரும் திகதியன்று உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது உங்களுடைய கர்மாவை கழிக்கும் ஆலயத்தை தெரிந்து கொண்டு, அங்கு சென்று ஆண்டவனை தரிசிப்பதன் மூலம் கர்மாவை கழிக்க இயலும்.  உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் மற்றும் 10, 19 ஆகிய நட்சத்திரங்கள் கெடுப்பலனை வழங்க கூடியவை. இதனை சோதிட மொழியில் ஜென்ம தாரை நட்சத்திரங்கள் என குறிப்பிடுவர்.

இதனை உதாரணமாக விளக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அந்தக் குழந்தை வலி, அழுகையுடன் தான் பிறக்கிறது. அதனால் தான் அந்தக் குழந்தை பிறக்கும் நேரம், நட்சத்திரம் அந்த குழந்தைக்கு மகிழ்ச்சியாக இருக்காது. அவர்களது பெற்றோர்களுக்கு தான் மகிழ்ச்சியாக இருக்கும். இதன் காரணமாகத்தான் எமக்கு நலன் பயக்கும் செயல்களை ஜென்ம நட்சத்திர நாளன்று தொடங்க வேண்டாம் என முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த நட்சத்திர தினத்தன்று ஆலய வழிபாடு, கர்மாவை கழிப்பதற்கான பரிகாரங்கள், தான தர்மங்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என சோதிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால் அதனுடைய பத்தாவது நட்சத்திரம் திருவாதிரை, பத்தொன்பதாவது நட்சத்திரம் சுவாதியாக இடம் பெறும். இந்த மூன்று நட்சத்திரங்களையும் நுட்பமாக அவதானித்தால் இவை ராகுவின் நட்சத்திரங்கள். இதனால் நீங்கள் ராகு காலம், ராகு பகவான் வழிபாடு போன்றவற்றை மேற்கொள்ளும் போது உங்களுடைய கர்மா குறைய தொடங்கும்.

இதனையடுத்து உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 3,12,21 ஆமிடத்தில் உள்ள நட்சத்திரங்கள் உங்களுக்கு கெடு பலனை ஏற்படுத்தும். அதாவது விபத்து, கண்டம், பொருளாதார இழப்பு, உறவின் விரிசல், அகால மரணம் போன்ற எதிர்கொள்ள விரும்பாத... கசப்பான சம்பவங்களை வழங்கும் நட்சத்திரங்கள் இவை. குறிப்பாக எலும்பு முறிவு, மாரடைப்பு, சிசேரியன், சத்திர சிகிச்சை போன்ற விடயங்கள் அனைத்தும் இந்த மூன்று நட்சத்திரத்தின் ஊடாகத்தான் உங்களை வந்தடையும். எனவே இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கவனமுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த திகதியில் சிறப்பான காரியங்களை தொடங்காமல், எம்முடைய இயல்பான நாளாந்த செயல்பாடுகளை மட்டுமே சற்று கவனமுடன் பின் தொடர வேண்டும்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால் அதன் மூன்றாவது நட்சத்திரம் உத்திரட்டாதி, பனிரெண்டாவது நட்சத்திரம் பூசம் , 21 வது நட்சத்திரம் அனுஷம் என வரும். இந்த மூன்று நட்சத்திரங்களையும் நுட்பமாக அவதானித்தால், இவை சனி பகவானின் நட்சத்திரங்கள். இதன் காரணமாக நீங்கள் சனிக்கிழமையன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் சனி பகவான் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு.. அதற்குரிய பரிகாரங்களை மேற்கொண்டு பாதிப்பிலிருந்து நிவாரணத்தை பெற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களது ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 5, 14, 23 ஆகிய நட்சத்திரங்கள் காரிய தடையை ஏற்படுத்தி, உங்களது வெற்றியை தாமதப்படுத்தும் அல்லது தோல்வியை நோக்கி பயணப்பட வைக்கும். இதன் காரணமாக சோதிட நிபுணர்கள் இந்த மூன்று நட்சத்திரங்களை காரிய தடையை ஏற்படுத்தும் நட்சத்திரங்கள் என்றும், இந்த நட்சத்திரம் வரும் நாளில் எந்த புதிய விடயங்களையும் தொடங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்துவர்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால் அந்த நட்சத்திரத்திலிருந்து ஐந்தாவது நட்சத்திரம் அசுபதி, 14 ஆவது நட்சத்திரம் மகம், 23 வது நட்சத்திரம் மூலம். இந்த மூன்று நட்சத்திர நாட்களில் புதிதாக எந்த தொழிலிலும், விடயத்திலும் ஈடுபடக் கூடாது. நுட்பமாக இந்த மூன்று நட்சத்திரங்களையும் அவதானித்தால் இவை கேது பகவானின் நட்சத்திரங்களாகும். கேது பகவானின் அதி தேவதையான விநாயகர் வழிபாடு, அருகம்புல், சிதறு தேங்காய் போன்ற  பரிகாரங்களை மேற்கொண்டால் கடுமையான பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இதனைத் தொடர்ந்து உங்களது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 7, 16, 25 ஆகிய நட்சத்திரங்கள் வதை தாரை நட்சத்திரங்கள் என குறிப்பிடுகிறார்கள். இந்த நட்சத்திரங்கள் உங்களது நிம்மதியை பறித்து, மன உளைச்சலை ஏற்படுத்தும். திருமணத்தின் மூலம் தொடக்கத்தில் நன்மையை அளித்துவிட்டு நாளடைவில் நிம்மதியின்மையை ஏற்படுத்தும். தொழிலில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கி, பிறகு நஷ்டத்தை உண்டாக்கி அதனூடாக மனக்கவலையை தோற்றுவித்து நிம்மதியை குறைத்து விடும்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் சதயம் என்றிருந்தால் அதிலிருந்து ஏழாவது நட்சத்திரம் கிருத்திகை, பதினாறாவது நட்சத்திரம் உத்திரம். 25 ஆவது நட்சத்திரம் உத்திராடம் ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்களையும் நுட்பமாக அவதானித்தால் இவை அனைத்தும் சூரிய பகவானின் நட்சத்திரங்களாகும். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானுக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் பாதிப்புகளை குறைத்து நிவாரணங்களை பெறலாம்.

மேற்கூறிய 12 நட்சத்திரங்கள் வரும் நாளில், நாம் அந்த நட்சத்திர அதிதேவதையை வணங்கி அந்த நட்சத்திர அதிபதியின் உணவியல் மற்றும் வாழ்வியல் பரிகாரங்களை மேற்கொண்டு பாதிப்பிலிருந்து எச்சரிக்கையுடன் நிவாரணத்தை பெற வேண்டும். என்றனர்.

எனவே எமக்கு நல்ல பலனை அளிக்கும் நட்சத்திரத்தையும் அறிந்து கொண்டிருக்கிறோம். எமக்கு கெடுப்பலனை அளிக்கும் நட்சத்திரத்தையும் அறிந்து கொண்டிருக்கிறோம். மேலும் நாம் எந்த திசா புத்தியில் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறோம் என்பதையும், அவை கோச்சாரத்தில் எம்மாதிரியான இடங்களில் அமர்ந்து பார்வையிடுகிறது என்பதையும் அவதானித்து, நாம் ஒரு பட்டியலை தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த பட்டியலின்படி தினமும் காலையில் எழுந்ததும் நல்ல பலன்களை வழங்கும் நட்சத்திர நாளில் உற்சாகமாக பணியாற்றுவதும்... கெடுபலன்களை வழங்கும் நாட்களில் இயல்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் வழக்கப் படுத்திக் கொண்டால்.. நாம் வாழ்க்கையில் தோல்வியால் துவளாது.. தொடர் வெற்றியை பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.

தகவல் கோவிந்தராஜ்.
தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க...

2023-05-31 12:49:27
news-image

கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2023-05-30 11:57:42
news-image

12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம்...

2023-05-27 11:40:57
news-image

நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

2023-05-26 12:46:01
news-image

சாபங்களுக்கு பரிகாரங்கள் இருக்கிறதா..?

2023-05-24 15:01:26
news-image

உங்களது பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மயிலிறகு!

2023-05-23 13:33:51
news-image

கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான...

2023-05-22 13:10:39
news-image

குரு பகவான் பயோடேட்டா

2023-05-20 14:01:08
news-image

கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் +...

2023-05-16 15:33:52
news-image

கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

2023-05-16 11:06:51
news-image

எந்தெந்த ராசியினருடன் சேர்ந்தால் அதிர்ஷ்டம் கிட்டும்?

2023-05-15 16:56:34
news-image

தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

2023-05-15 11:47:23