ஏ.சீ.சீ. பிரீயமியர் கிண்ண சர்வதேச ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வென்ற நேபாள அணி சம்பியன்!

Published By: Digital Desk 5

02 May, 2023 | 05:04 PM
image

 (எம்.எம்.சில்வெஸ்டர்)

நேபாளத்தில் நடைபெற்றுவந்த ஏ.சீ.சீ. பிரீயமியர் கிண்ண சர்வதேச ஒருநாள் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 7 விக்கெட்டுக்களால் வென்ற நேபாள அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

50 ஒவர்கள் ‍கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடராக நடத்தப்பட்ட ஏ.சீ.சீ. பிரீமியர் கிண்ண போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்தன.

இரண்டு குழுக்களாக நடத்தப்பட்ட இப்போட்டித் தொடரில் குழு ஏ யில் நேபாளம், ஓமான், மலேஷியா, சவூதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய 5 அணிகளும் குழு பீ யில்  ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய 5 அணிகளும் அங்கம் வகித்திருந்தன.

குழு நிலை சுற்றில் தத்தம் குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் ஒரு தடவை மோதி, தத்தம் குழுக்களின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 4 அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிக்கொண்டன.

மழை காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட குவைத் அணிக்கெதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 42 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குவைத் அணி 8.3 ஓவர்களில் 37 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிடவே போட்டியை தொடர முடியாமல் போனது. டக்வேர் லூயிஸ் விதி முறையை கடைப்பிடிப்பதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 21 ஓவர்களாவது வீசப்பட்டிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.

ஆகவே, குழுநிலை சுற்றில் புள்ளிகள் பட்டியலில் நேபாள அணி முதலிடத்தை வகித்திருந்ததால் இறுதிப் போட்டிக்கான தகுதியை அவ்வணி ‍பெற்றுக்கொண்டது. 

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி ஓமான் அணியை டக்வேர்த் லூயிஸ் விதி முறைப்படி ஐக்கிய அரபு இராச்சிய அணி 2 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு  இராச்சிய அணி  சகல விக்கெட்டுக்களையும்  இழந்து 236 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஓமான் அணி 43 ஓவர்கள் நிறைவின்போது 6 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிடவே போட்டி தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை பெய்யவே டக்வேர் லூயிஸ் விதிமுறைப்படி 2 ஓட்டங்களால் துரதிஷ்டவசமாக ஓமான் அணி தோல்வியைத் தழுவியது. 

இதையடுத்து, செவ்வாய்கிழமை (02 )நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை குவித்தது.

இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களை குவித்து 7 விக்கெட்டுக்களால் வெற்றியீடடி கிண்ணத்தை கைப்பற்றியது.

‍இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக 67 ஓட்டங்கள் குவித்த நேபான வீரர் குல்ஷான் ஷா தெரிவானதுடன், தொடரின் நாயகனாக 13 விக்கெட்டுகள் வீழ்த்தி, 55 ஓட்டங்களை குவித்த நேபாள வீரரான  சந்தீப் லமிச்சேன் தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35