என் மனைவியை முதன் முதலில் பார்த்த போதே நன்கு பழகிய முகம் போல இருந்தது, பார்த்ததுமே இவர் தான் என் கணவர் என முடிவு செய்து விட்டேன் என்றெல்லாம் தம்பதியர் பேசிக்கொள்வதை நாம் கேட்டிருப்போம். இது போன்ற உணர்வுகள் கொண்டோர், அதேபோல அந்நியோன்னியமாக நடந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பூர்வ ஜென்மத்திலும் தொடர்பு கொண்டவர்காக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம்.
குறட்டை விட்டதற்காக கூட விவாகரத்து கோரும் தம்பதியினரும் உண்டு. எத்தகைய சண்டை சச்சரவுகள் இருந்தாலும் புரிந்து கொண்டும், விட்டுக் கொடுத்தும் இணைபிரியாமல் வாழும் தம்பதியர்களும் உண்டு.
இத்தகைய மாறுபாடுகளுக்கு தம்பதியர் இடையேயான கிரக அமைப்புக்கள் முக்கிய காரணமாக அமைகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரனுடன் 1,5,9 ஆம் அதிபதிகளது தொடர்பு ஏற்படும் போது அவருக்கு ஜென்மம் ஜென்மமாய் தொடரும் துணை அமையும் என்கிறது ஜோதிடம். உதாரணமாக ஒரு சிம்ம லக்கின ஆணுக்கு விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்க அவருடன், சூரியன், (1ஆம் அதிபதி) குரு, (5 ஆம் அதிபதி), செவ்வாய் (9ஆம் அதிபதி) ஆகியோரில் ஒருவரோ ,இருவரோ அல்லது மூன்று கிரகங்களுமோ ஏதேனும் வகையில் தொடர்பு கொள்ளும் போது அவருக்கு பூர்வ ஜென்ம பந்தமே இந்த ஜென்மத்திலும் மனைவியாக கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கையாக உள்ளது.
கிரகங்களுக்கிடையிலான தொடர்பு எனும் போது சுக்கிரனை, 1,5,9 ஆம் அதிபதிகள் பார்த்தல், அவருடன் ஒரே ராசியில் இணைதல், அல்லது அந்த கிரகங்களின் நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் அமர்ந்திருத்தல் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம்.
இதேபோல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்துடன் 1,5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் தொடர்பு கொள்ளும் போது அந்த பெண்ணிற்கு பூர்வ ஜென்ம கணவனே மீண்டும் அமைவார் என்கின்றன ஜோதிட மூல நூல்கள்.
இது போன்ற அமைப்பை கொண்ட ஜாதகர்களுக்கு திருமணம் தாமதித்து நடப்பதாக அனுபவ ஜோதிடர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். யாரை வரனாக பார்த்தாலும் பிடிக்கவில்லை என கூறி திருமணத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் இது போன்ற ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திடீரென பார்க்கும் வரனுக்கு பச்சை கொடி காட்டி திருமணம் செய்து கொள்கிறார்களாம்.
இதேவேளை ஆணுக்கு குரு நின்ற வீட்டில் பெண்ணுக்கு சுக்கிரன் இருந்தாலும் பெண்ணுக்கு செவ்வாய் நின்ற வீட்டில் ஆணுக்கு சுக்கிரன் இருந்தாலும் அவர்கள் பூர்வ ஜென்ம பந்தத்தை கொண்டவர்கள் என நாடி ஜோதிடம் சொல்கிறது.
உதாரணமாக ஒரு ஆணின் ஜாதகத்தில் மகரத்தில் குரு இருக்க பெண்ணின் ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன் இருப்பதோ ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருக்க ஆணின் ஜாதகத்தில் அதே சிம்ம வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருப்பதோ பூர்வ ஜென்ம தொடர்பை கொண்டது என்கிறது நாடி ஜோதிடம்.
இவ்வாறான அமைப்பு கொண்டவர்கள், எத்தகைய சூழலிலும் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாது இறுதி வரையில் தமது இல்லற வாழ்வை கொண்டு செல்வார்கள், கோபத்தில் பிரிந்தாலும் கூட விரைவில் சமரசம் ஆகி விடுவர் என்கிறார்கள் அனுபவ ஜோதிடர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM