ஹொரணை - தக்ஷிலா வீட்டுத்திட்டத்திற்கு அண்மையில் பிறந்து ஒரு நாள் ஆன சிசு ஒன்றின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.