உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த பௌத்தமகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோள்களிற்கு அரசாங்கம் இன்னமும் பதில் அளிக்கவில்லை என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பிற்கு முரணாண சிலவிடயங்களை மாற்றவேண்டும் அல்லது புதிய சட்டமூலத்தை உருவாக்கவேண்டும் என பௌத்த மகாநாயக்கர்கள் உட்பட பலதரப்பினர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோள்களிற்கு இதுவரை பதில் வழங்கப்படாதமை குறித்து ஒமல்பே சோபித தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி பௌத்தமட பீடாதிபதிகளிற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை என தெரிவித்துள்ள ஒமல்பே சோபித தேரர் பௌத்தமத பீடாதிபதிகள் மாத்திரமின்றி சிவில் சமூகத்தினர் உட்பட பல தரப்பினர் குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் ஜனாதிபதி உட்பட உரிய தரப்பினரிடம் அதனை தெரிவித்துள்ளனர் எனினும் இதற்கு அதிகாரிகள் பதிலளிக்காதது கவலையளிக்கும் விடயம் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலம் பொலிஸார் பயங்கரவாதத்திற்கு தங்கள் விருப்பத்தின்படி அர்த்தம் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள ஒமல்பே சோபிததேரர் இதன் காரணமாக பொதுமக்களிற்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM