'துணிவு' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றிக்குப் பிறகு அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டிருப்பதால்.... ரசிகர்கள் உற்சாகமடைந்து அதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
'முன் தினம் பார்த்தேனே', 'தடையற தாக்க', 'மீகாமன்', 'தடம்', 'கலக தலைவன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் 'விடாமுயற்சி'. இதில் அஜித் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரவ் ஷா ஒழிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
இதனிடையே அஜித் குமார் - லைக்கா நிறுவனம் - மகிழ் திருமேனி - அனிருத் கூட்டணியில் உருவாகும் 'விடாமுயற்சி' ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு தொடக்க நிலையிலேயே ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM