வாகனங்களின் கண்ணாடிகளை திருடிய இருவர் வெள்ளவத்தையில் கைது ! 10 மோட்டார் சைக்கிள்கள், 40 கண்ணாடிகள் மீட்பு

Published By: Digital Desk 3

01 May, 2023 | 11:20 AM
image

கொழும்பு நகரில் நீண்டகாலமாக  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களின்  பக்க கண்ணாடி திருட்டில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கரவண்டியும், வாகன பக்க கண்ணாடிகள் 40 மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், திருடப்படும் கண்ணாடிகளை விற்பனை செய்த பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் கல்கிசை  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர்கள் என  தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்ட காலமாக கொழும்பு நகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை நூதனமாக  திருடி அந்த மோட்டார் சைக்கிள்களில்  வாகனங்களின் பக்க கண்ணாடிகளை உடைத்து திருடி விற்பனையில்   ஈடுபட்டு   வந்துள்ளமை தொடர்பில் பல்வேறுபட்ட முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்  சுபாஸ் காந்தவலவின் பணிப்பில்  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவின்  பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதர் கேசாந்  தலைமையிலான பிரியங்கர, சுரேந்திர, விஐயசிங்க, சமரவீர, சந்தன, கருணாதிலக, சில்வா, சஞ்சேய் உள்ளிட்ட பொலிஸ்  அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40