(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் 'வெற்றி பெறுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் திங்கட்கிழமை (மே 1) காலை 9.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.
அதன்போது ஜனாதிபதியின் விசேட உரையும் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, வாகன பேரணி, கண்காட்சிகள் என கட்சிகளின் பலத்தை காட்டும் சம்பிரதாய மே தின கூட்டத்தில் இருந்து விலகி, நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ளும் நோக்கில் 'வெற்றி பெறுவோம்' எனும் தொனிப்பொருள் மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
அத்துடன், இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதிகமான இளைஞர்களின் பங்குபற்றலுடன் இம்முறை மே தின கொண்டாட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
இளைஞர்களை வெற்றி பெறச்செய்யும் வேலைத்திட்டத்தையும் மே தின கூட்டத்தின்போது வெளியிடவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை ஒன்றும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் அதிகமான மக்களை அழைத்துவந்து, கட்சிகளின் பலத்தை காட்டும் வீண் விரயங்கள் மற்றும் சம்பிரதாய மே தின நிகழ்வில் இருந்து விலகி, ஒழுக்கமான, முறையான மே தின கூட்டம் ஒன்றை நடத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM