அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது.
ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார்.
இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன்முறை பதவியேற்றபோது உணர்ச்சிபூர்வமான தனது பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்ட ஒபாமாவின் இறுதி உரையை நேரில் காண்பதற்கும், கேட்பதற்கும் அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமுள்ள அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM