தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில்  விஜய் உள்ளிட்ட  பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள்.

பெரியவர்கள் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுவுக்கு இந்திய விலங்குகள் நல சபை மிக மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   இதேவேளை  விலங்குகள் நல சபையின் தூதராக ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா நியமிக்கப்பட்டுள்ளதோடு இதற்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே ரஜினி காந்த் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.