அமெரிக்க - இலங்கை உறவுகளை மறுபரிசீலனை செய்தல்

Published By: Vishnu

30 Apr, 2023 | 05:02 PM
image

உதித தேவப்ரிய

 டிசம்பர் 14, 2015 அன்று இலங்கைக்கு விஜயம் செய்த போது, அப்போதைய அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்ட தோமஸ் ஷானன், முதலாவது அமெரிக்க-இலங்கை பங்காண்மைப் பேச்சுவார்த்தையின்ஆரம்பிப்பத்தை அறிவித்தார். அடுத்த ஆண்டு பெப்ரவரியில் வாஷிங்டனில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, மக்களிடையேயான உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த முயன்றது.

 இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொதுவான தொடர்புகள், "ஜனநாயக ஆட்சியை" ஊக்குவிப்பதில் அவர்களின் பங்களிப்பு உள்ளிட்டவை தொடர்பில் அதிகமாக பேசப்பட்டது. இந்த முயற்சியானது அதன் முன்னோடிகளை விட மேற்குலகத்திற்கும் அமெரிக்காவிற்கும்அதிகம் சார்பானதாக கருதப்பட்ட அரசாங்கத்தின் யோசனையாக இருந்தது. இவ்வாறான புவிசார் அரசியல் பரிசீலனைகள் பேச்சுவார்த்தையில்குறிப்பிடத்தக்கதாகஇருந்த போதிலும், இலங்கையுடனான உறவுகளை உறுதிப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளின் சாத்தியம் மற்றும் மட்டுப்பாடுகளையும் அவை சுட்டிக்காட்டுகின்றன.

 வெளிப்படையாக, பேச்சுவார்த்தை இலங்கையுடன் அதிக ஈடுபாட்டை எதிர்பார்த்தது. ஆயினும்கூட, அனைத்து முயற்சிகளையும் போலவே,இதுவும் இந்து-பசிபிக் பகுதியில் அமெரிக்க-சீனா பதட்டங்களை உள்ளடக்கி ஆயினும்அதற்கு மட்டுப்படுத்தப்படாமல்சில பிரதான புவிசார் அரசியல் பிரச்சினைகளின் பிரித்தறிதலின் மூலமாக அத்தகைய ஈடுபாட்டை உருவாக்கி ஊக்குவிப்பதில் நிறைவடைந்தது."வலுவான" மற்றும் "பகிரப்பட்ட பிராந்திய பாதுகாப்பு நலன்களை" வலுப்படுத்தும் இலங்கை இராணுவத்துடனான உறவுமுறைகளைசரிப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகக் கூறிய ஐ.நா.வுக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவரான சமந்தா பவரால் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இந்த நலன்கள், புதுடில்லியால் பகிரப்பட்ட கரிசனைகள், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பான வாஷிங்டனின் கரிசனைகள்ஆகியவற்றை வெளிப்படையாகஉள்ளடக்கியது.

 நிச்சயமாக இதில் தவறோ ஆட்சேபனையோ எதுவும் இல்லை. நாடுகள் தங்கள் நலன்களைப் பின்தொடர்வதுடன்,ஏனைய நாடுகளுடனான தங்கள் உறவுகளை அந்த நலன்களின் பிரித்தறிகை மூலமாக பார்க்கின்றன. இந்தியா மற்றும் சீனாவைப் போலவே அமெரிக்காவும் நீண்ட காலமாக இலங்கையை அனைத்து எண்ணங்கள் மற்றும் நோக்கங்களுக்கும் உலகின் மிகவும் போட்டித்தன்மையான கடற்கோளமாக மாறியுள்ள சமுத்திரமான மூலோபாய கடலில் உள்ளஓர் மூலோபாய கண்காணிப்பு நிலையமாகவே கருதுகின்றது. எவ்வாறாயினும், கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக அமெரிக்கா மோசமான விமர்சனங்களையே பெற்றுள்ளது.ஏனைய பிராந்தியங்களில் அதன் சாகசங்கள் அல்லது தவறான சாகசங்கள்மற்றும் எந்த வகையிலாவதுஅதன் ஜனநாயகத்தின் ஊக்குவித்தல், எந்த விதமான தலையீட்டு நடவடிக்கையும் சந்தேகம்இல்லாவிடினும் கரிசனையுடன்பார்க்கின்ற நாடுகளின் விருப்பை கொண்டிருப்பதில்லை என்பதால்அந்த மோசமான விமர்சனங்களின் பெருபாலானவைசிறந்த முறையில் கையாளப்படாமையால்தகுதியாகவுள்ளன.

 அப்படியாயின், எவ்வாறு, அமெரிக்காவும் இலங்கையும் ஒருவருக்கொருவர் தங்களது உறவுகளை மறுசீரமைக்க முடியும்? இருதரப்பு உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன், அத்தகைய பணி இலகுவானது அல்ல என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். தெற்காசியாவில், இந்தியாவில் கூட அமெரிக்காவின் நற்பெயர் முன்பு இருந்ததைப் போலில்லை. இப்பிராந்தியத்தில் இந்தியா அதன் உத்தியோகபூர்வமற்ற பங்காளராக மாறியிருந்தாலும், வாஷிங்டனுடனான அதன் உறவுகளில் வலுவான கரத்தைப் பெற விரும்புவதற்கான அறிகுறிகளை டில்லி காட்டுகின்றது. தெற்காசியாவில் உள்ள சிறிய அரசுகள், டெல்லியுடனான அவர்களின் பிரச்சினைக்குரிய உறவுகள் மற்றும் சீனாவுடனான வரலாற்று ரீதியாக நட்புறவு ஆகியவற்றின் காரணமாக, அமெரிக்காவுடன் நெருங்கி வருவதற்கு அதிக அக்கறையை காட்டவில்லை.நாட்டில் CIA தலைவரின் இருப்பு "ஏற்றதாக இல்லை" என்ற அடிப்படையில் CIAவின் தலைவருக்கு அனுமதி மறுப்பதற்கானநேபாள அரசாங்கத்தின் தீர்மானம் பல சமீபத்திய உதாரணங்களில் ஒன்றாகும்.

 மறுபுறம், அமெரிக்கா இலங்கையை வேறு எந்த பிரித்தறிதல் ஊடாகவும் பார்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது: அது இந்தியப் பெருங்கடல் மற்றும் பரந்த இந்து-பசிபிக் பகுதிக்குள் அதன் நோக்கங்கள் மற்றும் நலன்களின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அந்த வகையில், CIA தலைவர் நாட்டிற்கு ரகசிய விஜயம் செய்தார் என்ற இன்னமும் உத்தியோகபூர்வமாக மறுக்கப்படாத வதந்திகள், இலங்கைத்தீவுக்கு உண்மையில் சென்ற அமெரிக்க அதிகாரிகளின் தெளிவற்ற மற்றும் புதிரான கருத்துக்களுக்கு துணைபுரிந்தன: ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்,"திருகோணமலையில் உள்ள முகாம் குறித்து ஆலோசிப்பதற்காக" தான் இலங்கைக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பிரதம துணைச் செயலர் ஜெடிடியா பி. ரோயல் தெரிவித்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் உண்மையில் தீவின் மூலோபாயப் பகுதிகளின் உரிமை தொடர்பான உள்நாட்டு அச்சத்தைப் போக்குவதற்கான அமெரிக்க அதிகாரிகளின் முயற்சிகளாகும்.

 வாஷிங்டனோ அல்லது கொழும்போ ஆராயாத பாதுகாப்பை கருத்திலெடுக்காமல் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள ஒரு வலுவான விடயம் கலாச்சார தொடர்புகளாகும். எவ்வாறாயினும், சில விசித்திரமான காரணங்களுக்காக, மக்களிடையேயான உறவுகள் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு ஆகியவை முதலாவது அமெரிக்க-இலங்கை பங்காண்மை பேச்சுவார்த்தையில் கருத்திலெடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டாலும், ஊடக வெளியீடுகள் மற்றும் கூட்டு அறிக்கைகள் அத்தகைய பகுதிகளை முன்னிலைப்படுத்தவில்லை: அவற்றின் அதிகமான கரிசனைகளைஇராணுவ ஒத்துழைப்பு, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்புக் விடயங்கள் ஆகியவற்றில் காணப்பட்டதுடன் தொடர்ந்தன. பிந்தைய பகுதிகள் இலங்கையுடன் மட்டுமல்லாது, எந்தவொரு நாட்டுடனுமான அமெரிக்க உறவுகளின் அடித்தளமாக இருந்தாலும், தீவுடன் இன்னும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட கலாச்சார இராஜதந்திரத்தை பயன்படுத்துவதை வாஷிங்டன் ஏன் பார்க்கவில்லை என்பது புதிரானதாகும்.

 இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவு இந்த வருடம் கொண்டாடப்பட்டது. எவ்வாறாயினும், அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள், குறைந்தபட்சம் 250 வருடங்கள் பின்னோக்கிச் செல்கின்றன: : கடல்சார் மாகாணங்களின் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, 1788 ஆம் ஆண்டு அமெரிக்க சந்திப்பு பதிவு செய்யப்பட்டது. இந்த ஆரம்ப சந்திப்புகள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும், ஆனால் அவை இறுதியில் உறுதியான மற்றும் உத்தியோகபூர்வ ஈடுபாடுகளாக உருவெடுத்தன. 1850 ஆம் ஆண்டில், ஜான் பிளாக் காலியில் அமெரிக்க வர்த்தக முகவராக தனது தகுதியில் நாட்டிற்கான முதலாவது அமெரிக்க தூதுவரானார். பல தசாப்தங்களாக அவரது கல்லறை காலி கோட்டையில் எங்கோ இருப்பதாக நம்பப்படுகிறது. செப்ரெம்பர் 2016 இல், அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் அந்த இடத்தைக் கண்டறிந்ததுடன், இது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும், ஆனால் தலைப்புச் செய்திகளில் இடம் பெறாத ஒன்றாகும்.

 பொருளாதார மற்றும் இராஜதந்திர தொடர்பு தவிர, மத மற்றும் கலாச்சார கூறுகளும் கூட உள்ளன. ஆயினும், இங்கேயும் கூட, தீவுடனானஉண்மையில் அந்த பிராந்தியத்துடனான உறவுகளைஉறுதிப்படுத்துவதில் வாஷிங்டனின் சாதனை, பாராட்டுக்குரியதாக இல்லை: சாந்தனி கிரிண்டே ஓர்Factum Perspectiveஇல் சுட்டிக்காட்டியதைப் போல, CIA மற்றும் அமெரிக்க உளவு அமைப்பு ஆகியவை ஆசியா முழுவதும் கம்யூனிசத்தை மூலோபாயமான பௌத்தத்தின் பயன்பாடு மூலமாக குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றாலும் அத்தகைய முயற்சிகள் ஒருபோதும் பலனளிக்கவில்லை. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்த மறுமலர்ச்சியில் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்டின் ஈடுபாடு, மேரி ஃபோஸ்டருடன் அநகாரிக தர்மபாலவின் தொடர்புகள் மற்றும் இலங்கையில் பௌத்தம் மற்றும் பெண்களுக்கான கல்வியில்மிராண்டா டி சௌசா கனவரோவின் பங்களிப்பு உட்பட கலாச்சார மற்றும் மத முன்னணியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் நீண்டகால உறவுகள் காணப்படுகின்றன. 

இவை அனைத்தும் இருந்தபோதிலும், நாட்டிலும் பிராந்தியத்திலும் அமெரிக்கா ஒரு பெரிய நம்பகத்தன்மை இடைவெளியை எதிர்கொள்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள், அதனை எதிர்கொள்வதற்கு சிறிதளவுநடவடிக்கைகளையும்  மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோசமான செய்திகளைப் பெற்றுள்ளதுடன் தொடர்ந்தும் பெற்று வருகின்றது.

ஒருவேளை, இலங்கையுடன் ஆழமான உறவுகளைத் தேடுவதற்குப் பதிலாக, இந்த இடைவெளிகளை நிவர்த்தி செய்ய வேண்டியதுடன், தீவையும் அதன் மக்களையும் அது இந்து-பசிபிக்கிற்கான அதன் மூலோபாயத்தின் பார்வை மூலமாக பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் வாஷிங்டன் எப்போதாவது இங்கே வேறு கொள்கையைத் தேர்ந்தெடுக்குமா என்பது சந்தேகமேயாகும்.

உதித்த தேசப்பிரிய Factum இல் சர்வதேசஉறவுகள்தொடர்பான பிரதான பகுப்பாய்வாளராவார். அவரை uditha@factum.lkமூலமாகதொடர்பு கொள்ளலாம்.

Factum என்பதுஆசிய – பசுபிக்கைமையமாககொண்டசர்வதேசஉறவுகள், தொழில்நுட்பஒத்துழைப்புமற்றும்மூலோபாயதொடர்புகள்பற்றியசிந்தனைக்குழுவாகும், அதனைwww.factum.lkமூலமாகஅணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11
news-image

இந்தியாவின் தடை நீடிப்பு - இனவாதிகளுக்கு...

2024-05-19 18:28:36
news-image

சம்பந்தனின் அர்த்தமற்ற கோரிக்கை

2024-05-19 18:27:54