சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவி விலைத் தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கல மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல், புது ஆடை, கோயில் தரிசனம் என எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்கிற நோக்கத்தில், வடகிழக்கில் நாம் தொடங்கிய அபிவிருத்திகளை நிறுத்தி, விவசாயத்திற்கு எவ்வித பயனும் தராத இந்த அரசை அகற்றி, ‘‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்கிற முன்னோர் கூற்றுப்படி எம் நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் ஒளி பிறக்கும் ஆண்டாக இவ் ஆண்டு அமையும் என்பதில் எந்த சந்ததகமும் இல்லாது. புதிய சிந்தனைகளோடும் புதிய முயற்சிகளோடும் பிறந்துள்ள புத்தாண்டில் நம்பிக்கையோடு அனைவரது வாழ்விலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி, ஆனந்தம் தங்கிட இப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

இந்த விவசாய நாட்டில், இந்த அரசாங்கம் விவசாயத்திற்காக நாம் வழங்கிய மானியங்களை நிறுத்தியதோடு நில்லாது நெல் விலையை குறைத்து  விவசாயிகளுக்கும் அரிசி விலையை வரலாறு காணாத விலைக்கு ஏற்றி மக்களுக்கும் பாரிய சுமையை தந்துள்ளது. இந்த பொங்கல் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நடுவில் இருக்கும் தரகு காரர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சியான பொங்கல்.

எவ்வாறாயினும் புதிய திட்டங்களோடும் சிந்தனைகளோடும் இவ்வருடம் சிறந்த வருடமாக அமையும் என்பதில் நெல் அளவு கூட சந்தேகம் வேண்டாம். சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். மீண்டும் ஒரு முறை தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.