கிளிநொச்சியில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் மே தின நிகழ்வு

Published By: Nanthini

29 Apr, 2023 | 09:19 PM
image

'அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம்; மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம்' எனும் தொனிப்பொருளில் சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டிலான மே தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் எதிர்வரும் மே 1ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இது தொடர்பில் அக்கட்சியின் மே தின செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்கள் ஏற்கனவே போரின் நெருக்கடியையும், போர்க்காலப் பொருளாதார நெருக்கடியையும் மிக நீண்ட காலமாக சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

அந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு முன் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியோடு தொடர்ந்து வரும் இன ஒடுக்குமுறையும் மேலும் பெரிய நெருக்கடிச் சுமையை உருவாக்கியுள்ளது. இவற்றுக்கு மத்தியில், புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

நாட்டில் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே ஆட்சி நடத்தப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டு மக்கள் சிந்திய கண்ணீரும் இரத்தமும் கொஞ்சமல்ல. இதிலிருந்து நாம் மீள வேண்டும். இனியும் சம்பிரதாய அரசியல் வாக்குறுதிகளை நாம் நம்ப முடியாது. சம்பிரதாய மே தின நிகழ்வை நடத்துவதில் அர்த்தமில்லை.

இன்று பிற நாடுகளிலும், சர்வதேச வங்கிகளிலும் அடமானம் வைக்கப்பட்டுள்ள நாட்டில் நாம் போராடாமல் இருக்க முடியாது. எமது போராட்டம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கட்டும். மக்களின் விடுதலையை நோக்கியதாக அமையட்டும் என அக்குறிப்பில்  காணப்படுகிறது.

அத்துடன், குறித்த நாளில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்வில் பொது மக்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மரக்கடத்தல் முறியடிப்பு : வாகனத்துடன்...

2025-02-10 16:02:03
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06