சிவப்பரிசி புட்டு

Published By: Ponmalar

29 Apr, 2023 | 09:16 PM
image

தேவையான பொருட்கள்: 

சிவப்பரிசி மா - 4 கப் 

தேங்காய் துருவல் - 1 கப் 

தண்ணீர் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

  • ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். 
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.) 
  • புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். 
  • பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மா போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும். 
  • பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 
  • பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும். 
  • சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. 
  • கத்தரிக்காய் குழம்பு, கடலை குழம்பு, கிழங்கு பொறியல், வாழைப்பழம் போன்றவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்