சர்ச்சைக்குரிய ஒரு பாடல் பற்றிய புழுதி சற்று அடங்கி  இருக்கிறதாக தோன்றும் வேளையில் விஜய் ஆண்டனி  இசை அமைத்து நடிக்கும் 'பிச்சைக்காரன்' படத்தின் promotion பாடல் ஒன்று இன்று மாலை வெளிவர உள்ளது. நாக்கு மூக்க என்ற பாடல் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற விஜய் ஆண்டனி, இந்தப் பாடல் மூலமும் அதேயளவு புகழ் பெறுவார் என்று பாடலை கேட்டவர்கள் கூறுகின்றனர். இயக்குனர் சசி இயக்க, விஜய் ஆண்டனி Film Corporation  தயாரிக்கும் இந்தப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி வருகிறது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு பலம் சேர்க்கும் வகையில் படப்பிடிப்பு குழுவினர் இப்போது புதிதாக கிளாமர் பாடல் என்று அழைக்கப்படும் பாடல் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றனர்.

இரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாகவும் கவனத்தை ஈர்க்கத்தான் இந்தப் பாடல் கிளாமர் சாங் என்று பெயரிடப்பட்டு உள்ளது. 

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதை, தலைப்பு மற்றும் விளம்பரம் என மூன்று முக்கியக்காரணங்கள் உண்டு. 'பிச்சைக்காரன் ' என்ற தலைப்பில் எங்களுக்கே முதலில் சற்றுத் தயக்கம் இருந்தாலும் கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இருக்காது என்பதாலே ஏற்றுக் கொண்டோம். இப்போது இந்த தலைப்புக்கு வரும் அபரிதமான அதரவு எங்களை மகிழ்ச்சியில் ஆற்றுகிறது. படத்தின் மேல் இரசிகர்களுக்கு உள்ள ஈர்ப்பினை இன்னமும் அதிகபடுத்த ஒரு promotional song அவசியம் என்று நினைத்தேன். வித்தியாசமான இசையும் வண்ண கலவையான காட்சிகளும் கலந்த கிளாமர் சாங் அந்தப் பணியை செவ்வனே செய்யும். சமுதாயத்தில் உள்ள எவரையும் இழிவுப்படுத்தவோ காயப்படுத்தவோ செய்யாது இந்தப் பாடல் என்கிறார் விஜய் ஆண்டனி.

தகவல் : சென்னை அலுவலகம்