தலைகனம் இருந்தால் தோல்வி நிச்சயம் - ஆன்மிக கதை

Published By: Ponmalar

29 Apr, 2023 | 03:11 PM
image

கர்வத்தோடு லிங்கத்தை தன் வாலாலேயே சுருட்டி தூக்கிவிட முயற்சித்தார். ஆனால் சிவலிங்கம் அந்த இடத்தில் இருந்து நகரவே இல்லை. 

கர்வத்தோடு ஆணவத்தோடு செய்யும் காரியம் எதுவுமே பலிக்காது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். தான் செய்த தவறை உணர்ந்த அனுமன், லிங்கத்திடம் மன்னிப்பு கேட்டு பூமியில் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, ராமேஸ்வரத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்ற படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். ஆனால் சிவபெருமானோ நல்ல நேரத்தில் நான் இந்த இடத்தில் பிரதிஷ்டை ஆகி விட்டேன். உனக்கு தேவைப்பட்டால் திரும்பவும் காசிக்குச் சென்று இன்னொரு சுயம்புலிங்கத்தை எடுத்துக்கொள். என்றபடி ஆணையிட்டு விட்டார். 

என்ன செய்வது? அனுமன் திரும்பவும் காசிக்கு சென்றார். என்ன ஆச்சரியம்? காசிக்கு திரும்பும்போது இயற்கை சூழல் அனைத்தும் சரியான முறையில் இயங்கியது. அனுமன் கண்டுபிடித்துவிட்டார். இவையெல்லாமே காலபைரவரின் சூழ்ச்சியினால்தான் நடந்துள்ளது என்பதை! காசிக்கு சென்றால் கங்கா நதியில் வினோதமான ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்தது. 

காசி நதிக்கரையில் ஒன்றுக்கு மேற்பட்ட பல லிங்கங்கள் இருந்தன. அதில் சுயம்புலிங்கம் எது என்று, பாவம் அனுமனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சமயம் பார்த்து, கருடனும் பல்லியும் அனுமனுக்கு உதவி செய்தன. கருடன் ஒரு குறிப்பிட்ட லிங்கத்தின் மேல் சுற்றினார். அந்த சமயம் பல்லி சத்தம் போட்டது. இந்த சகுனத்தை கண்ட அனுமன் அந்த குறிப்பிட்ட லிங்கம் தான் சுயம்புலிங்கம் என்று கண்டுபிடித்து விட்டார். 

மறுபடியும் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் பைரவரோ லிங்கத்தை எடுக்க விடவில்லை. காசி மாநகரை பாதுகாக்கும் என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி லிங்கத்தை எடுக்கலாம்? என்று சொல்லி பைரவருக்கும், அனுமனுக்கும் போர் நிகழ்ந்தது. தன்னால் எவரையும் ஜெயித்து விட முடியும் என்ற ஆணவம் அனுமனுக்கு இருந்ததால், இந்த யுத்தத்தில் தோல்வியடைந்தார். 

இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிவர்கள், பைரவரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். ராமேஸ்வரத்தில், ராமபிரான் பூஜை செய்வதற்காக, இந்த லிங்கத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே அந்த அவசரத்தில் தான் அனுமன், காசியின் காவல் தெய்வமான தங்களிடம் அனுமதி கேட்காமல் லிங்கத்தை எடுத்து விட்டார். தாங்கள் காசியில் இருந்து லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதி தரவேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மனம் குளிர்ந்த காலபைரவர், அனுமன் லிங்கத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தார். 

காசி மாநகரை பாதுகாக்கும் பைரவர் 'என் அனுமதி இன்றி அனுமனுக்கு எப்படி சகுனம் சொல்லலாம்'? என்ற கோபத்தில், இனி இந்த காசி மாநகரத்தின் மேல் கருடன் பறக்கக் கூடாது என்றும், பல்லி சத்தம் போடக் கூடாது என்றும் சாபம் பிறப்பித்து விட்டார். 

காசி மாநகரத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கும் காலபைரவர் இடம் அனுமன் சிவலிங்கத்தை எடுப்பதற்கு முன்பாக அனுமதி கேட்டு இருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. 

யாராக இருந்தாலும் சரி. எந்த இடத்தில் இருந்தாலும் சரி. அவர் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடத்தில் கொடுத்தே ஆகவேண்டும். தலைகனம் என்பது யாருக்கும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் தோல்வியைத் தழுவுவார்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த கதை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09
news-image

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மஹா...

2024-06-01 15:46:52
news-image

மட்டக்களப்பில் வைகாசி மாத கதிர்காம யாத்திரையும்...

2024-05-30 10:23:39
news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்

2024-05-22 14:02:32
news-image

மடவல, நலந்தன்ன மலையில் சுடலை மாடன்...

2024-05-16 15:15:32
news-image

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய...

2024-05-12 09:35:40
news-image

புரட்சிக்கவிஞர் பாரதிதாச‌னின் பிறந்தநாளை 'உலகத் தமிழ்...

2024-04-27 19:39:28
news-image

மதுரை சித்திரை திருவிழா 2024 -...

2024-04-24 17:24:26