பஞ்சாட்சரங்கள் தரும் பயன்கள்

Published By: Ponmalar

29 Apr, 2023 | 01:22 PM
image

எம்மில் பலருக்கும் பாலினி பேதமின்றி நாளாந்தம் ஏராளமான பிரச்சினைகள் எதிர்பாராத வடிவத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கும்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த பாணியில் அதனை எதிர்கொள்வர். பல தருணங்களில் ஒரு சிக்கலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பதே எமக்கு சட்டென புலப்படாது.

அதன் போது எம்மில் இருக்கும் இறையுணர்வு, இறை சக்தி உடனடியாக பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புகொண்டு உங்களின் ஆழ்மனதில் பதிவாகியிருக்கும் இறைநம்பிக்கையின் மந்திரங்களை உங்களையும் அறியாமல் மனதில் உச்சரிக்கத் தூண்டும்.

அதனைத் தொடர்ந்து எம்மையுமறியாமல் எம்மில் பலர் தங்களின் இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை உச்சரிக்கத் தொடங்குவர்.

இந்த தருணத்தில் ஆன்மீக குரு மூலம் தீட்சைப் பெற்றவர்கள் அல்லது அவர்களை மனதால் வழிகாட்டியாக கருதுபவர்கள் அவர்கள் கற்பித்த பஞ்சாட்சர மந்திரங்களை மனதிலோ அல்லது வாயால் உரத்து உச்சரிக்கவோ தொடங்குவர்.

அதன் பிறகு மலை போல் வந்த பிரச்சினை பனிபோல் விலகிவிடும்.  இதனை பலர் தங்களது அனுபவத்தில் கண்டிருப்பர். அதன் போது அவர்கள் பயன்படுத்திய மற்றும் குருமார்கள் பின்பற்றுமாறு குறிப்பிட்ட பஞ்சாட்சரங்களை கீழே பட்டியலிட்டிருக்கிறோம், இந்த பஞ்சாட்சர மந்திரங்களை சமயோசிதமாக பயன்படுத்தி, உங்களை தற்காத்துக் கொள்ளலாம். 

நங் சிவயநம - திருமணம் நிறைவேறும்

அங் சிவயநம - தேக நோய் நீக்கும்

வங் சிவயநம - யோக சித்திகள் பெறலாம்

அங் சிவயநம - ஆயுள் வளரும், விருத்தியாகும்

ஓம் அங் சிவாயநம - எதற்கும் நிவாரணம் கிட்டும்

கிவி நமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீம் நமசிவய - விரும்பியது நிறைவேறும்

ஐம் நமசிவய - புத்தி வித்தை மேம்படும்

நமசிவய - பேரருள், அமுதம் கிட்டும்

உங்யு நமசிவய - வியாதிகள் விலகும்

கிலிம் நமசிவய - நாடியது சித்திக்கும்

சிங் வந் நமசிவய - கடன்கள் தீரும்

நமசிவய வங் - பூமி கிடைக்கும்

சௌம் சிவாய - சந்தான பாக்கியம் ஏற்படும்

சிங் றிங் சிவயநம - வேதானந்த ஞானியாவார்

உங் றிம் சிவயநம - மோட்சத்திற்கு வழிவகுக்கு

அங் நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

அவ்வுஞ் சிவாயநம - சிவன் தரிசனம் காணலாம்

ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

லங் ஸ்ரீம் நமசிவாய - தானிய விளைச்சல் மேம்படும்

ஓம் நமசிவய - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங் உங் சிவய நம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

ஓம் ஸ்ரீம் சிவாய நம - சிர ரோகம் நீங்கும்

ஓம் அங் சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

தொகுப்பு சுபயோக தாசன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்