இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- நடிகர் சூரி இணைந்து நடித்திருக்கும் 'விடுதலை 1' திரைப்படம், ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
பட மாளிகையில் வெளியான படத்தின் கால அவகாசத்துடன் கூடுதலாக காட்சிகள் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதால், 'விடுதலை 1' படத்தை ரசிகர்கள் டிஜிட்டல் தளத்தில் ஆர்வமுடன் கண்டு களித்து வருகிறார்கள்.
ஆர் எஸ் இன்போடெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'விடுதலை'.
இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்திரை பதித்த இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார்.
இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை ஞானி' இளையராஜா இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படம் படமாளிகையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றது.
தற்போது டிஜிட்டல் தள பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்... இந்த திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் ஜீ5 எனும் டிஜிட்டல் தளத்தில் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி இருக்கிறது. பட மாளிகையில் வெளியான படத்தின் நீளத்தை விட, படத்தின் இயக்குநரான வெற்றிமாறன்... டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்காக 16 நிமிட காட்சிகளை கூடுதலாக இணைத்திருக்கிறார்.
டிஜிட்டல் தள வெளியீடுகளுக்கு முறையான தணிக்கை இல்லை என்பதால்.. இந்த கூடுதலான காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பது... ரசிகர்களை உற்சாகப்பட வைத்திருக்கிறது.
மேலும் கூடுதலாக இணைக்கப்பட்ட காட்சிகளை காண வேண்டும் என்ற ஆவலையும் தூண்டி இருக்கிறது. இதன் காரணமாக வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் பாகம், டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்கும் என டிஜிட்டல் தள வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM