(எம்.மனோசித்ரா)
எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதா என்று சிந்திக்க வேண்டும்.
அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு நாம் அழைப்பு விடுக்கவில்லை. மாறாக ஏனைய வழிகளில் அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறே கோருகின்றோம் என ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது. இவ்வாறான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் போது, ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை அதனை எம்மால் வெளிப்படுத்த முடியாது.
எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட பின்னரே அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் அதனை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக இது தொடர்பில் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது வரி அதிகரிப்பு தொடர்பிலும் அவர் பாராளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வரி அதிகரிக்கப்படுவது சாதாரண விடயமாகும். எனினும் தற்போது நாம் எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதன் வீதத்தை அதிகரிக்க வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே எதிர்க்கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் நோக்கத்திற்காக மாத்திரம் செயற்படுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவுவதா என்று சிந்திக்க வேண்டும்.
இதற்கான பகிரங்க அழைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் திகதி முதல் விடுக்கப்பட்டது. அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு நாம் கூறவில்லை. மாறான வேறு பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்க முடியும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM