இன, மொழி, மத பேதம் இன்றி ஆனந்தமாகவே வாழ விரும்புகிறது மனித குலம். ஆனால் எப்படி இதை அடைவது என்பது புரியாத புதிராவே உள்ளது.
நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்ற ஒரு குடையின் கீழ் வருவோமேயானால் இன, மொழி, மத பேதம் என்ற வேறுபாடு இன்றி சந்தோஷமாக வாழ முடியும் என்ற அத்தியாவசிய கல்வியை வழங்குவதே நமது ஸ்ரீமத் பகவத் கீதை. காலத்தால் அழியாத என்றும் நிலைத்து நிற்கக்கூடிய உன்னதமான ஞானம் இது.
§ நான் யார்?
தற்காலிகமான இந்த
உடலா அல்லது
நிரந்தரமான ஆத்மாவா?
§ இறைவன் யார்?
பலரா அல்லது
ஒருவரா?
§ எனக்கும்
இறைவனுக்குமான
தொடர்பு என்ன?
§ ஏன் இந்த உலகம்
படைக்கப்பட்டது?
§ நாம் எங்கிருந்து
வந்தோம் ?
§ நாம் எங்கு திரும்பி
செல்வோம்?
§ நாம் ஏன் இந்த உலகில்
துன்பப்படுகினறோம்?
§ ஏன் பிறப்பு, இறப்பு,
முதுமை, நோய்
ஏற்படுகிறது.
போன்ற அடிப்படையான, ஆழமான, அறியாமையைக்கு விரிவான விளக்கங்களை தருவது மட்டும் இன்றி...
§ நல்ல குணங்களை
எவ்வாறு
வளர்த்துக் கொள்வது?
§ வாழ்க்கையை எவ்வாறு
நெறிப்படுத்திக்
கொள்வது ?
§ இறைவனிடம் எவ்வாறு
அன்பு செலுத்துவது ?
§ இறைவனுக்கு எப்படி
பக்தி தொண்டு
செய்வது?
§ இறுதியாக
இறைவனிடம் எவ்வாறு
சரணடைந்து முக்தி
பெறுவது?
போன்ற மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விடயங்களையும் அழகாக கற்றுத்தரும் ஒரே ஒரு அற்புதமான நூல் ஸ்ரீமத் பகவத் கீதை மட்டுமே.
தோஷங்களின் கடலான இந்த கலியுகத்தில் இறைவனுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளங்கள் நிறைந்த தமிழ் கீதா குழுவினரால் நமது பாரத பூமியான இந்தியாவில் இருந்து இணையவழி ஊடாக எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 18 நாட்கள் நடைபெறவுள்ளன.
இலவசமாக கற்றுத்தரப்படும் இந்த உன்னதமான ஞானத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM