இன்றைய சூழலில் பணத்தை விரும்பாத நபர்களேயில்லை. ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், தங்களது எண்ணம் ஈடேறவும், பொதுமக்களுக்கு துன்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நடத்தும் யாகத்திற்கும், வேள்விக்கும், ஆன்மீக பணிகளுக்கும் கூட.. மக்கள் தங்களுடைய உடலுழைப்பை வழங்கினாலும், பணம் என்பது அவசியமாகிறது. மேலும் தற்போது பணம் எப்போதும் எம்முடைய கைகளிலும், பொக்கெட்களிலும் இருப்பதை விரும்புகிறோம்.
பண வரவு குறித்தோ.. பண வசியம் குறித்தோ..எந்த குறிப்புகள் இணையத்தில் வெளியானாலோ அல்லது நாளிதழ்களில் வெளியானாலோ அதனைக் கவனத்தில் கொள்கிறோம்.
ஏதேனும் ஒரு சூழலில் அதனை பயன்படுத்தி பலனடைகிறோம். ஆனால் ஒரு சிலர் பணம் வந்தபிறகு அது வந்த பாதையை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு தொடர்ந்து தனலட்சுமியின் அருள்பார்வை கிட்டுவதில்லை. மேலும் பணம் எம்முடன் தொடர்ந்து வாசம் செய்யவேண்டும் என்றால் சில எளிய பரிகாரங்களை மேற்கொள்ளவேண்டும் என்று சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது ஒரேயொரு பொருளை எம்முடன் வைத்துக்கொண்டீர்களென்றால்.. பண வசியம் உண்டாகி, தனம் எம்முடனேயே இருக்கும். அந்த பொருள் கருப்பு மஞ்சள். நாம் மஞ்சளைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் கருப்பு மஞ்சளைப் பற்றி குறைவானவர்களே அறிந்திருப்பார்கள்.
அந்த கருப்பு மஞ்சளில் காளி வாசம் செய்வதாகவும்,காளியின் அம்சம் கொண்டதாகவும் கூறுவது வழக்கம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர்மறை சக்திகளின் தீண்டல் இருக்காது.
நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும், வெற்றியைத் தேடித் தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக் கூடியதாகும்.
பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம் - பணவரவு சித்திக்கும்.
சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு உகந்ததாக கருதப்படும் இந்த கருப்பு மஞ்சள், ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது.
பணத்தை எதிர்நோக்கி வெளியே செல்லும் போது இதை நெற்றியில் இட்டோ அல்லது தன்னுடனோ எடுத்து செல்லலாம். பண வரவு உறுதி. நீண்ட நாட்களாக வராத கடன்களாகயிருந்தால், இதனை நெற்றியில் இட்டுக்கொண்டு சென்றால், முழு கடன் தொகையோ அல்லது பகுதியளவு கடன்தொகையோ வசூலாவது உறுதி. சிலர் தங்களுடைய வீட்டிலும், வணிகத்தலங்களிலும், விற்பனை நிலையத்திலும் உள்ள பண பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்.
கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டை வலுத்தால்... சமாதானத்தை மனைவி விரும்பினால், இதை குழைத்து முகம் முழுவதும் தேய்த்து குளித்து வர தாம்பத்யம் சிறக்கும்.
இதை சட்டீஸ்கர் போன்ற வட இந்திய மாநிலங்களில் இன்றும் ஆட்காட்டி விரலில் ஊசியால் குத்தி குருதியை எடுத்து, அத்துடன் கருப்பு மஞ்சளைக் குழைத்து நெற்றியில் இட்டும் செல்ல.. வராத பணமும் வந்து சேரும் என்பதாக ஐதீகம்.
ஏனெனில் இந்த கருப்பு மஞ்சளில் அனைத்து யட்சிணி தேவதைகள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள் வாசம் செய்வதாக நம்பிக்கை உண்டு. இவர்கள் இதனை பயன்படுத்தும் நபர்களுக்கு அவர்களின் தனம் சார்ந்த விருப்பத்தை நிறைவேற்ற கடமைப்பட்டவர்கள் என்று ஆன்மீகப் பெரியோர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM