பதுளை, கொஸ்லந்தை உனகந்த பகுதியில் காணப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான பாரிய கஞ்சா தோட்டம் ஒன்று பொலிஸார் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

 கொஸ்லந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து பொலிசார் உனகந்த

வனப்படுதியில் நான்கு ஏக்கர் நிலப் பிரதேசத்தில் காணப்பட்ட கஞ்சா தோட்டத்தை சுற்றிவளைத்து தீயிட்டு அழித்துள்ளனர்.

 இதேவேளை குறித்த கஞ்சா தோட்டத்தை பராமரித்து வந்ததாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை பண்டாரவளை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.