குளிரை போக்குவதற்காக அடுப்புக்கு அருகில் இருந்த வேளை, தீப்பிழம்பு பரவி 5 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளை, கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை குறித்த சிறுமி வீட்டின் அடுப்பின் அருகே குளிரை போக்கி கொண்டிருந்த நிலையில், அவரது தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது சிறுமி வெப்பத்தை அதிகரிக்க அடுப்பில் மண்ணெண்ணெய்ரூ ஊற்றியுள்ளார். இதன்போது சிறுமி அணிந்திருந்த உடையில் இவ்வாறு தீப்பிழம்பு பரவியுள்ளது.

பின்னர் கடும் தீ காயங்களுக்கு உள்ளான சிறுமி, கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடு பின்னர்  மஹியங்கனை வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.