நடிகர் சதீஷ் நடிக்கும் 'வித்தைக்காரன்' படத்தின் மோசன் போஸ்டர் வெளியீடு

Published By: Ponmalar

28 Apr, 2023 | 05:27 PM
image

தமிழில் நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'வித்தைக்காரன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வெங்கி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் சதீஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் குப்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஆனந்தராஜ், மதுசூதன் ராவ், சுப்ரமணியம் சிவா, ஜோன் விஜய், பவல் நவகீதன், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வி பி ஆர் இசையமைத்திருக்கிறார். 

சதுரங்கத்தை மையப்படுத்தியும், சதுரங்க விளையாட்டு வீரரின் வாழ்வியலை மையப்படுத்தியும் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வைட் கார்பெட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார்.

இதனிடையே 'நாய் சேகர்', 'ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வித்தைக்காரன்' வெற்றிப் பெற்றால்.. அவரின் சந்தை மதிப்பு உயர்வதுடன், தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து, கதாநாயகனாக உயர்ந்தவர்களின் பட்டியலில் இவரும் இடம் பிடிப்பார் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் சென்னை - திரைப்பட விமர்சனம்

2024-12-13 17:39:31
news-image

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன்...

2024-12-13 17:39:50
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள்...

2024-12-13 17:40:04
news-image

விவசாயிகளின் அவல நிலையை உரக்கப் பேசும்...

2024-12-13 17:37:27
news-image

சென்னையில் தொடங்கிய 22 ஆவது சென்னை...

2024-12-13 17:03:25
news-image

மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்' திரைப்படத்தின்...

2024-12-13 16:54:00
news-image

கோலாகலமாக நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின்...

2024-12-13 17:36:38
news-image

“புஷ்பா 2” பட வெளியீட்டில் கூட்டத்தில்...

2024-12-13 17:11:43
news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42