முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் : நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை  

Published By: MD.Lucias

13 Jan, 2017 | 05:24 PM
image

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி  தெரிவித்தார். 

 இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக் கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் பயிற்சி நிறைவுசெய்து வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் இன்னல்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பாக முப்படையினரின் பணிகள் அளப்பரியவை எனவும், முப்படைகளினதும் தலைவர் என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் படையினர் மீது தான் மிகுந்த நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களை மென்மேலும் அதிகரித்து நாளைய உலகின் சவால்களை வெற்றிகொள்வதற்கு தேவையான இயந்திர மற்றும் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்து கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் குறைவின்றி பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

இன்று முற்பகல் திருகோணமலை சீனக்குடா விமானப்படைக் கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகளால் வரவேற்கப்பட்டதுடன், ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் முகமாக படையினரின் மரியாதை அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது.

“தாய்நாட்டை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை விமானப் படையினரின் பெருமைமிகு செயற்பணிகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக இலங்கை விமானப் படையின் உறுப்பினர்களாக இணைந்துகொள்ளும் 56ஆவது பயிலுனர் பாடநெறி மற்றும் 08ஆவது பெண்கள் பயிலுநர் பாடநெறி என்பவற்றை பின்பற்றிய பயிலுநர் உத்தியோகத்தர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல், 84ஆவது பறக்கும் பயிலுநர் பாடநெறியை பின்பற்றிய உத்தியோகத்தர்களுக்கு பறப்பு சின்னம் சூட்டுதல், 162ஆவது நிரந்தர விமானப்படை பயிலுநர் பாடநெறி மற்றும் 32ஆவது நிரந்தர பெண்கள் படையின் பயிலுநர் பாடநெறி என்பவற்றை வெற்றிகரமாக பின்பற்றிய விமான படையினர் ஆகியோரின் பயிற்சி நிறைவு செய்து வெளியேறும் நிகழ்வும் இவ்வாறு இடம்பெற்றது. 

இப்பாடநெறிகளின்போது விசேட திறமைகளை காட்டிய பயிலுநர் படையினர் மற்றும் விமானப்படை வீர, வீராங்கனைகளுக்கு விசேட விருதுகளும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

 

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12