நிர்வாண சூரிய குளியல் உரிமையை  நீதிமன்றத்தின் மூலம் வென்ற ஜேர்மனிய கட்டட உரிமையாளர்

Published By: Sethu

28 Apr, 2023 | 03:39 PM
image

ஜேர்மனியிலுள்ள கட்டட உரிமையாளர் ஒருவர், கட்டட வளாகத்தில் நிர்வாணமாக சூரியகுளியலில் ஈடுபடுவதற்கான உரிமையை நீதிமன்றத்தின் மூலம் வென்றுள்ளார்.

பிராங்பர்ட் நகரிலுள்ள இக்கட்டட உரிiமையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்குச் சொந்தமான கட்டடத்தில் மனிதவள நிறுவனமொன்றும் அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

இக்கட்டட உரிமையாளர் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடுவதால், அசௌகரியம் ஏற்படுவதாகக் கூறி, அவருக்கு வழங்க வேண்டிய வாடகையின் ஒரு பகுதியை நிறுத்தி வைத்திருந்தது.

இதற்கு எதிராக பிராங்பர்ட் பிராந்தியத்தின் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கட்டட உரிமையாளர் நிர்வாணமாக படிகட்டில் நடந்து செல்வதாகவும், குடியிருப்பாளர்கள் அல்லது விருந்தினர்கள் படிகட்டில் அவரைக் கண்டால் அவருடன் பிரச்சினைப்படுவதாகவும் மேற்படி நிறுவனம் கூறியது.

ஆனால்,  அங்கு விஜயம் செய்த விசாரணைக் குழுவொன்று, நிலைமை அவ்வாறில்லை எனக் கண்டறிந்தது என நீதிமன்றம் தெரிவித்தள்ளார். 

முறைப்பாட்டாளரான கட்டட உரிமையாளர் எப்போதும் குளியலறை உடை ஒன்றை  அணிந்திருப்பதாகவும், சூரியக்குளியல் கட்டிலிலுக்கு முன்னால் வைத்தே அதனை கழற்றுவதாகவும் அவர் நம்பகரமாக தெரிவித்துள்ளார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அத்துடன், மேற்படி நிறுவன ஊழியர்கள் அலுவலக அறைகளிலிருந்து, ஜன்னலுக்கு வெளியே அதிக தூரம் எட்டிப்பார்த்தால் மாத்திரமே தெரியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால், கட்டட உரிமையாளரின் சூரிய குளியலால், கட்டடப் பாவனைக்கு பாதிப்பு ஏற்படவில்லை  என நீதிமன்றம் தெரிவித்தது, 

குடியிருப்பாளர்கள் 3 மாத வாடகையில் 15 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அது நிர்மாணப் பணிகள் காரணமாக ஏற்பட்ட இரைச்சல் மற்றும் தூசி காரணமாகவே இக்கழிவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது. 

ஜேர்மனியில் கடற்கரைகள், ஏரிகள் மற்றும் தமது சொந்த பெல்கனிகளில்  மக்கள் நிர்வாணமாக சூரிய குளியலில் ஈடுபடுவது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து பிரசித்தமாக உள்ளது. 

அங்குள்ள 300 நிர்வாண சூரியக் குளியல் கழகங்களில் சுமார் 600,000 அங்கத்தவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். (படம்: பிராங்பர்ட் நீதிமன்றக் கட்டடம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right