அயர்லாந்தை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வென்ற இலங்கை தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

Published By: Vishnu

28 Apr, 2023 | 03:20 PM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (28) நிறைவுபெற்ற 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100ஆவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என இலங்கை முழுமையாகக் கைப்பற்றியது.

போட்டியின் கடைசி நாளான இன்று தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அயர்லாந்து சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 50 விக்கெட்களைக் கைபற்றிய சுழல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டிய இந்தப் போட்டியில் அயர்லாந்தின் இன்னிங்ஸ் தோல்வியைத் தடுக்க ஹெரி டெக்டர் எடுத்த கடும் முயற்சி பலனளிக்காமல் போனது.

தேநீர் இடைவெளைக்கு சற்றுமுன்னர் ஹெரி டெக்டரின் விக்கெட்டையும் கடைசி வீரர் பென் வைட்டின் விக்கெட்டையும் அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றிய அசித்த பெர்னாண்டோ இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

189 பந்துகளை எதிர்கொண்ட ஹெரி டெக்டர் 8 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி 46 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட வேறு எந்த அயர்லாந்து துடுப்பாட்ட வீரரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

இலங்கை பந்துவீச்சில் ரமேஷ் மெண்ஸ் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் பெர்னாண்டோ 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் எண்ணிக்கை சுருக்கம்

அயர்லாந்து 1ஆவது இன்: 492 (கேர்ட்டிஸ் கெம்ஃபர் 111, போல் ஸ்டேர்லிங் 103, அண்டி பெல்பேர்னி 95, லோக்கன் டக்கர் 80, ப்ரபாத் ஜயசூரிய 174 - 5 விக்., அசித்த பெர்னாண்டோ 78 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 92 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 704 - 3 விக். (குசல் மெண்டிஸ் 245, நிஷான் மதுஷ்க 205, திமுத் கருணாரட்ன 115, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆ.இ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35