சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?

Published By: Ponmalar

28 Apr, 2023 | 05:32 PM
image

நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை ஒரு மிகச்சிறந்த உணவாக இருப்பதற்கு கீழ்கண்டவை முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. ரத்த சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போவைத்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. (0.5 கிராம்). இதில் உள்ள அதிகமான அளவு புரதம் (புரோட்டீன்) (ஏறக்குறைய 7 கிராம்) செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது. முட்டையில் விட்டமின் ஏ, டி, ஈ, கே, பி12 ஆகியவையும் தசை மற்றும் நரம்புகளுக்கு தேவையான பொட்டாசியம், தோலுக்கு முக்கியமான விட்டமின் பயோடின், மூளை வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் கோலின் ஆகியவை அதிக அளவில் இருக்கிறது . 

ஒரு முட்டையில் 75 கலோரிகள் இருக்கிறது. இதில் 15 கலோரிகள் வெள்ளைப் பகுதியிலும், 60 கலோரிகள் முட்டையின் மஞ்சள் பகுதியிலும் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் ஒரு முட்டையை முழுவதுமாக சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டை சாப்பிடலாம். மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை பகுதி மட்டும் சாப்பிட்டால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம். முட்டையில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் இதை ஒரு முழுமையான புரதம் (கம்ப்ளீட் புரோட்டின்) என்று அழைக்கிறார்கள். 

ஒரு முட்டையின் மஞ்சளில் கிட்டத்தட்ட 184 கிராம் கொலஸ்ட்ரால், 5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதை தவிர்ப்பது நல்லது. முட்டையை அவித்து சாப்பிடுவது நல்லது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29