(எம்.வை.எம்.சியாம்)
பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு பெப்ரல் அமைப்பினால் அனுப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதன் காரணமாக நடுநிலைமையை பாதுகாக்கும் வகையில் செயல்படுவது சிக்கலாகி வருகிறது.
அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற ஆட்சியினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்குள்ள சந்தர்ப்பம் இல்லாமற்போகுமாயின் சட்டத்தை மதிக்கும் சாதாரண பொதுமக்களும் விரக்தியடைவதைத் தவிர்க்க முடியாது.
இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM