மன்னார்  பேசாலை பகுதியில் இருந்து ட்யூக் என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம்  இராமேஸ்வரம் செல்ல முயன்ற போது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியில் தனுஷ்கோடி பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இராணுவ பிரச்சனை காரணமாக அவர் வந்துள்ளாரா? அல்லது வேறு எதும் அமைப்பில் உள்ளவரா என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.