"மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட பாணியில் நிகழ்ந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு

Published By: Rajeeban

28 Apr, 2023 | 02:04 PM
image

தமிழகத்தில் இறந்துபோன அஸ்ஸாமை சேர்ந்த இளைஞரின் உடலை மீட்டு, உடனடியா சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்த நிகழ்வு இன்னும் மனித நேயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கடைகோடி மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து சீனா எல்லையின் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வறுமையின் காரணமாக பொருளாதார ஈட்டுவதற்காக சென்னை வந்து தனது செக்யூரிட்டி வேலை பணியை செய்து குடும்பத்தின் வறுமையை போக்க முயற்சித்து வந்துள்ளார் ஜான் குஜூர் என்ற 26 வயது நிரம்பிய வாலிபன்.

அவரது குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் ஐந்து நபர்கள் இருக்கையில், அனைவரும் வறுமையில் வாழ்ந்து நிலையில் ஜானின் வருமானத்தை நம்பியே அந்த குடும்பம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வெயிலின் காரணமாக அவருக்கு உடலில் அம்மை நோய் தொற்று ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. நோய்க்காக அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் இறந்துள்ளார்.

அவரது நண்பர் மூலமாக இவர் இறந்த செய்தி அசாமில் உள்ள அவரது குடும்பத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. குடும்பத்தினர் மகனின் இறந்த செய்தியை கேட்டு செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மேலும் அவரது உடலை எப்படி அஸ்ஸாமிற்கு கொண்டு வருவது என்ற வழிமுறைகள் தெரியாமல் சிரமப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் அசாம் மாநில மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு நேற்றைய முன்தினம் தனது சகோதரனின் உடலை அஸ்ஸாமிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஜான் குஜூர் குடும்பத்தினரின் கஜுரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட அஸ்ஸாம் மாநில மாவட்ட ஆட்சியார், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை மீட்டு அஸ்ஸாமிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் R-SOYA நிறுவனரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளருமான சரவணன் தலைமையில்,“பசியில்லா தமிழகம்” என்னும் அமைப்பை உருவாக்கி, சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வரும் முகமது அலி ஜின்னாவின் உதவியுடன் சென்னைக்கு வந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, ஜான் குஜூரின் உடலை, அரசு வழிகாட்டுதல் படி பதப்படுத்துவதற்கான வழிமுறைகளை செய்து, பட்டினப்பாக்கம் காவல்துறையினரின் விமான மூலம் தமிழகத்தில் இருந்து அசாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அஸ்ஸாமில் உள்ள அவரது குடும்பத்தினருடன், அவர்களது மொழியில் R-SOYA தன்னார்வலர் திவ்யா பேசி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும், இங்கு உள்ள சூழ்நிலைகளை விளக்கியும் உடனுக்குடன் தகவல் கொடுத்து வந்தார். ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் ஒரே நாளில் அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இறந்தவரின் உடலை வெளிமாநிலத்திற்கு விமானத்தில் அனுப்பி வைப்பது போல் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

அதேபோல் ஒரே நாள் காலையில் தனது பணியை துவங்கிய திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் தன்னார்வலர்கள் உடன் பசியில்லா தமிழகம் குழுவினர் அன்று இரவு விமானத்தில் அவரது உடலை அனுப்பி வைத்ததை அறிந்து மனித நேயம் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி...

2023-05-29 10:23:44
news-image

மீன்பிடிப் போட்டியில் மீன்களின் உடலுக்குள் உலோகங்களை...

2023-05-26 16:43:05
news-image

களமிறங்கும் ’மோடி மாம்பழம்’ – ஏன்...

2023-05-25 16:38:24
news-image

வவுனியாவில் 8 கால்களுடன் பிறந்த அதிசய...

2023-05-24 14:28:12
news-image

காதலித்த கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்றது...

2023-05-20 12:54:29
news-image

காதல் திருமணம் செய்தவர்களே அதிகளவில்விவாகரத்து கேட்கின்றனர்......

2023-05-19 12:13:33
news-image

30,000 ரூபா சம்பளம் வாங்குபவரிடம் 7...

2023-05-12 18:04:43
news-image

திருடர்கள் பல விதம் ; பாதணிக்கடை...

2023-05-06 11:37:44
news-image

நான் என் வேலையைத்தான் செய்தேன் -...

2023-05-04 14:34:36
news-image

சாரதி மயங்கிய நிலையில் பஸ்ஸை பாதுகாப்பாக...

2023-05-01 13:25:24
news-image

நிர்வாண சூரிய குளியல் உரிமையை  நீதிமன்றத்தின்...

2023-04-28 15:39:17
news-image

"மனிதநேயம் சாகவில்லை” – அயோத்தி திரைப்பட...

2023-04-28 14:04:16