கோடைகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை

Published By: Ponmalar

28 Apr, 2023 | 02:14 PM
image

கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது.

இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது. 

ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது.

கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. 

குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும். 

கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி, மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைகால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம்.

காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் விட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது. மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருவிழி மாற்று சத்திர சிகிச்சை...!?

2024-10-05 17:31:43
news-image

அறிவாற்றல் குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-10-04 17:07:05
news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41