(நெவில் அன்தனி)
இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 16ஆவது இண்டியன் ப்றீமியர் லீக் அத்தியாயத்தில் தனது கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவிய ராஜஸ்தான் றோயல்ஸ், வியாழக்கிழமை (27) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போடடியில் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்று அணிகள் நிலையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த அதிரடி அரைச் சதமும் அடம் ஸம்ப்பாவின் மிகத் துல்லியமான பந்துவீச்சும் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது. இது இந்த வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
யஷஸ்வி ஜய்ஸ்வாலும் ஜொஸ் பட்லரும் 50 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் பட்லர் (27), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (17), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷிம்ரன் ஹெட்மயர் (8) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.
அவர்களில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜய்ஸ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸுடன் 77 ஓட்டங்களை விளாசினார்.
மத்திய வரிசையில் துருவ் ஜுரெல் 15 பந்துகளில் 34 ஓட்டங்களையும் தேவ்தத் படிக்டில் 13 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ருத்துராஜ் கய்க்வாட் (47), டெவன் கொன்வே (8) ஆகிய இருவரும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் சென்னை சுப்பர் கிங்ஸின் ஓட்ட வேகம் போதுமானதாக இருக்கவில்லை.
அத்துடன் அஜின்கியா ரஹானே (15) அம்பாட்டி ராயுடு (0) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.
ஷிவம் டுபேயும் மொயீன் அலியும் 5ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தபோதிலும் அது வெற்றி இலக்கை எட்டுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை.
மொயீன் அலி 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் டுபே 33 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். ரவிந்த்ர ஜடேஜா 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 35 ஓடடங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM