டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்களை விரைவாக பூர்த்திசெய்த இலங்கையர் ப்ரபாத் ஜயசூரிய

Published By: Vishnu

28 Apr, 2023 | 11:38 AM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்று சாதனை ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து சாதனைகளும் மைல்கற்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (28) மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய இன்று நிகழ்த்தினார்.

முதலாவது  இன்னிங்ஸில் சதம் குவித்த போல் ஸ்டேர்லிங்கின் விக்கெட்டை இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டினார்.

அவர் 7 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்த இலங்கை விரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

டில்ருவன் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 11 போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்தன் மூலம் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய முன்னைய இலங்கை வீரர்களாக இருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈட்டி எறிதலில் நடீஷாவுக்கு வெள்ளிப் பதக்கம்...

2023-10-03 20:58:27
news-image

நாடு திரும்புகிறார் தனுஷ்க குணதிலக்க

2023-10-03 14:24:13
news-image

சங்காவுக்கு கிடைத்துள்ள புதிய தலைமைத்துவம் !

2023-10-03 12:36:35
news-image

இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

2023-10-01 13:01:49
news-image

கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக ஒத்துழைப்பு வழங்கத் தயார்...

2023-09-30 13:18:03
news-image

ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில்...

2023-09-30 10:17:06
news-image

பங்களாதேஷுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை தோல்வி...

2023-09-30 07:12:48
news-image

கால்பந்தாட்டத்தில் புதிய யுகம் தோற்றுவிக்கப்படும் :...

2023-09-30 07:00:32
news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57