டெஸட் இன்னிங்ஸில் இலங்கையின் முதல் 4 வீரர்களும் சதங்கள் குவித்து  உலக சாதனை; திணறுகிறது அயர்லாந்து

Published By: Vishnu

27 Apr, 2023 | 07:17 PM
image

(நெவில் அன்தனி)

அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் ஒன்றில் முதல் நால்வரும் சதங்களைக் குவித்ததன் மூலம் உலக சாதனை ஒன்றை நிலைநாட்டிய இலங்கை, அந்தப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் செலுத்தியுள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 4ஆவது விரராக சதம் குவித்ததுதம் இலங்கை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களுடன் டிக்ளயார் செய்தது.

212 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அயர்லாந்து வியாழக்கிழமை (27) நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அயர்லாந்து அதன் முதலாவது இன்னிங்ஸில் 492 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் 2 ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க அயர்லாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு மேலும் 158 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

104ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 15அவது சதத்தைப் பூர்த்தி செய்த மெத்யூஸ் 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் ஓரே டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் குவித்த முதலாவது வீரர்களாகி டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனையை நிலைநாட்டினர்.

போட்டியின் 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 3 விக்கெட்களை இழந்து 704 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இன்று காலை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய நிஷான் மதுஷ்கவும் குசல் மெண்டிஸும் தத்தமது முதலாவது இரட்டைச் சதங்களைக் குவித்து ஆட்டம் இழந்தனர்.

இரண்டாவது விக்கெட்டில் 268 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் இருவரும் தனிநபர்களுக்கான அதிகூடிய டெஸ்ட் இன்னிங்ஸ் எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

நிஷான் மதுஷ்க 339 பந்துகளை எதிர்கொண்டு 22 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 205 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 291 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகள், 11 சிக்ஸ்களுடன் 245 ஓட்டங்களையும் குவித்தனர்.

அப் போட்டியில் 11 சிக்ஸ்களைக் குவித்த குசல் மெண்டிஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸ்கள் விளாசிய இலங்கை விரரானார்.

இதற்கு முன்னர் இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவே ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்களை அடித்திருந்தார். பங்களாதேஷுக்கு எதிராக சட்டோக்ராம் அரங்கில் 2014இல் 319 ஓட்டங்களைக் குவித்த குமார் சங்கக்கார 8 சிக்ஸ்களை அடித்திருந்தார்.

குசல் மெண்டிஸ் 3அவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸுடன் மேலும் 133 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மெத்யூஸ் 114 பந்தகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற வேகமான சதம் இதுவாகும்.

முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த தினேஷ் சந்திமால் தோற்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக 13 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஓய்வுபெற்றார்.

தனஞ்சய டி சில்வா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

போட்டியின் கடைசி நாளான நாளை வெள்ளிக்கிழமை (28) கால நிலை சீராக இருக்கும் பட்சத்தில் இலங்கை வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தனது 7ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ப்ரபாத் ஜயசூரிய இன்னும் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினால் மிகக் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

சாதனைகள்

இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளிலிருந்து இதுவரை ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு சாதனையாவது நிலைநாட்டப்பட்டு வந்துள்ளமை விசேட அம்சமாகும்.  

1ஆம் நாளன்று அணித் தலைவர் அண்டி பெல்பேர்னியும் போல் ஸ்டெர்லிங்கும் 115 ஓட்டங்களைப் பகிர்ந்த அயர்லாந்தின் சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

2ஆம் நாளன்று அயர்லாந்து 492 ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதன் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது.

3ஆம் நாளன்று திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் சதங்கள் குவித்ததன் மூலம் இலங்கை சார்பாக சதங்கள் குவித்த மூன்றாவது ஆரம்ப ஜொடி என்ற கௌரவத்தைப் பெற்றனர்.

அதே தினத்தன்று அவர்கள் இருவரும் பகிர்ந்த 228 ஓட்டங்கள் காலி விளையாட்டரங்கில் இலங்கை ஆரம்ப ஜோடியினரால் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக அமைந்தது.

4ஆம் நாளன்று குசல் மெண்டிஸும், ஏஞ்சலோ மெத்யூஸும் சதங்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியது.

ஏற்கனவே திமுத் கருணாரட்னவும் நிஷான் மதுஷ்கவும் சதங்கள் குவித்த நிலையில் டெஸ்ட் இன்னிங்ஸில் முதல் நால்வரும் சதங்கள் குவித்த சாதனையையே இலங்கை நிலைநாட்டியது.

மேலும், நேற்றுவரை இரண்டு அணிகளாலும் மொத்தமாக 6 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

எண்ணிக்கை சுருக்கம்

அயர்லாந்து 1ஆவது இன்: 492 (கேர்ட்டிஸ் கெம்ஃபர் 111, போல் ஸ்டேர்லிங் 103, அண்டி பெல்பேர்னி 95, லோக்கன் டக்கர் 80, ப்ரபாத் ஜயசூரிய 174 - 5 விக்., அசித்த பெர்னாண்டோ 78 - 2 விக்., விஷ்வா பெர்னாண்டோ 92 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: 704 - 3 விக். (குசல் மெண்டிஸ் 245, நிஷான் மதுஷ்க 205, திமுத் கருணாரட்ன 115, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆ.இ.)

அயர்லாந்து 1ஆவது இன்: (4ஆம் நாள் ஆட்டநேர முடிவில்) 54 - 2 விக். (பீட்டர் முவர் 19, அண்டி பெல்பேர்னி 18 ஆ.இ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11
news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49