(நெவில் அன்தனி)
அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவதும் கடைசியமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் 2 மைல்கல் சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
தனது 58ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் குசல் மெண்டிஸ் முதல் தடவையாக இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அப் போட்டியில் அவர் பெற்ற 245 ஓட்டங்களானது டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.
அத்துடன் அப் போட்டியில் 11 சிக்ஸ்களை விளாசியதன் மூலம் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்களை அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன்னர் இலங்கை சார்பாக குமார் சங்கக்காரவே ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்களை அடித்திருந்தார். பங்களாதேஷுக்கு எதிராக சட்டேக்ராம் அரங்கில் 2014இல் 319 ஓட்டங்களைக் குவித்த குமார் சங்கக்கார 8 சிக்ஸ்களை அடித்திருந்தார்.
இது இவ்வாறிருக்க. இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் தேநீர் இடைவெளைக்கு நிறுத்தப்பட்டபோது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 650 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
ஏஞ்சலோ மெத்யூஸ் 59 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இரட்டைச் சதம் குவித்த நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ 205 ஓட்டங்கபை; பெற்று ஆட்டம் இழந்தார். திமுத் கருணாரட்ன நேற்றைய தினம் 115 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்திருந்தார்.
அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 492 ஓட்டங்களைப் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM