காலியில் சதங்களும் சாதனைகளும் குவிகின்றன

Published By: Vishnu

27 Apr, 2023 | 01:19 PM
image

(நெவில் அன்தனி)

சர்வசாதாரணமாக சாதனைகள் குவிக்கப்பட்ட வண்ணம் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அயர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 2ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வலுவான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து பெற்ற 492 ஓட்டங்களுக்கு பதிலளித்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை போட்டியின் நான்காம் நாளான இன்று வியாழக்கிழமை (27) பகல்போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 489 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

நிஷான் மதுஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 261 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

நிஷான் மதுஷ்க தனது கன்னிச் சதத்தை இரட்டைச் சதமாக்கி 202 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 160 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் சதங்களும் சாதனைகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

அயர்லாந்தின் அதிகூடிய இணைப்பாட்ட சாதனை, மொத்த எண்ணிக்கை சாதனைகளைத் தொடர்ந்து காலி விளையாட்டரங்கிற்கான இலங்கையின் ஆரம்ப விக்கெட் சாதனை நேற்று புதன்கிழமை நிலைநாட்டப்பட்டது.

இந் நிலையில் மற்றொரு சாதனை இலங்கையினால் இன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 துடுப்பாட்ட வீரர்களும் இலங்கை சார்பாக சதங்கள் குவித்தது இதுவே முதல் தடவையாகும். திமுத் கருணாரட்ன (115), நிஷான் மதுஷ்க (202 ஆ.இ.), குசல் மெண்டிஸ் (160 ஆ.இ.) ஆகிய முதல் 3 துடுப்பாட்ட வீரர்களும் இந்த டெஸ்டில் சதம் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41