பாவங்கள் விலகி பலன்கள் கிடைத்திட... மேற்கொள்ளவேண்டிய அற்புத பரிகாரம்...!

Published By: Ponmalar

27 Apr, 2023 | 12:44 PM
image

இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதாவது ஒரு பாவத்தை.. ஏதாவது ஒரு சூழ்நிலையில் அறிந்தோ அறியாமலோ..செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பெற்றோர்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போது... அவர்கள் பேசி முடிக்கும் வரை பொறுமை காக்காமல், அவர்கள் பேசும் போதே இடை புகுந்து பதிலளிக்கிறேன் என்ற கோணத்திலும்,  தன்னிலை விளக்கமளிக்கிறேன் என்ற கோணத்திலும் பேசுவதும் பாவம் என முன்னோர்கள் எடுத்துரைக்கிறார்கள்.

கணவன் மனைவி என்று தெரிந்தும் அவர்கள் நடந்து செல்லும் போது அவர்களுக்கு மத்தியில் தெரிந்தோ.. தெரியாமலோ செல்வதும் பாவம் என முனனோர்கள் வரையறுத்திருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான செயல்கள் பாவங்கள் என வரையறுக்கப்பட்டிருந்தாலும், அதையெல்லாம் நாம் இன்றைய சூழலில் எளிதாக குற்றவுணர்வேயில்லாமல் கடந்து செல்கிறோம். இதில் சில பாவங்கள் அடுத்த பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல சொல்லவியலாத துன்பங்கள் ஏற்படுகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் எம்மிடமிருந்து விலகி செல்ல, ஒரு பரிகாரம் இருக்கிறது. இதற்கு இறை பக்தி மிகவும் முக்கியம். 

பரிகாரம்

• சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து விட்டு பூஜை அறையில் ஒரு சிறிய உருளியை எடுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெயையோ அல்லது நெய்யையோ முக்கால் பாகத்திற்கு ஊற்ற வேண்டும். பிறகு ஒரு துணி மூலம் திரித்த திரியை அதில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றிய தீபத்தை கையில் ஏந்திக் கொண்டு அதில் திருப்பதி ஏழுமலையான் ஒளி வடிவில் இருப்பதாக மனதில் நினைத்துக் கொண்டு,‘நான் செய்த பாவங்கள் அனைத்திலுமிருந்து என்னை காத்தருள்வாய். இறைவா!’ என்று அவரை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். 

பிறகு மாவிளக்கு, சர்க்கரைப் பொங்கல், வடை, எள்சாதம் போன்றவற்றை சாமிக்கு படைக்க வேண்டும். அதன் பிறகு மலர்கள் மற்றும் துளசியை தூவி ஏழுமலையானுக்காக ஏற்றி வைத்த தீபம், அன்றைய தினம் மாலை வரை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஏழை எளிய மக்களுக்கு ஆடைகளை தானமாக கொடுக்க வேண்டும்.(அவர்கள் நம்மை வாழ்த்துவது போலான ஆடைகளாக அவை இருக்க வேண்டும்.) 

இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும், சனிக்கிழமை, ஏகாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் என இதில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொண்டு அந்த நாளில்.. அந்த திதியில்.. அந்த நட்சத்திரத்தில் செய்வது கூடுதல் சிறப்பு.

மேற்கூறிய பரிகாரத்தை முழு மனதுடன் மேற்கொள்ளவேண்டும். ஏதோ சோதிடர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் சொல்லிவிட்டார்களே..! என கடமைக்காகவோ அல்லது கொமர்ஷலுக்காகவோ செய்யக்கூடாது- ஒரு முகமான மனதுடன் இத்தகைய பரிகாரத்தை மேற்கொண்டீர்களென்றால், எம்முடைய பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் விலகி, நல்ல பலன்கள் கிடைக்கும்.

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வத்தை வாரி வழங்கும் பைரவர் வழிபாடு..!?

2025-03-22 16:55:33
news-image

மீளா கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கான நூதன...

2025-03-21 15:58:28
news-image

உங்களது வங்கிக் கணக்கில் தன வரவு...

2025-03-20 15:32:20
news-image

வெற்றிகளை குவிக்கும் வெற்றிலை ரகசியம்!

2025-03-19 15:46:41
news-image

கடன் பிரச்சினைகள் எளிதாக நீங்குவதற்கு சூட்சும...

2025-03-18 17:17:07
news-image

துர்க்கை அம்மனின் அருளைப் பெறுவதற்கான பிரத்யேக...

2025-03-17 16:50:00
news-image

சாமிமலை ஓல்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய...

2025-03-16 15:56:46
news-image

நவகிரக தோஷம் விலகுவதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-03-15 16:45:43
news-image

அரசாங்கத்தின் அனுசரணை கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-13 19:57:31
news-image

எதிரி தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான சூட்சம...

2025-03-12 15:11:37
news-image

கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-03-12 13:46:57
news-image

காரியம் வெற்றி பெறுவதற்கான சூட்சம வழிபாடு..!?

2025-03-11 17:36:35